ஏமன் நாட்டில் பலியான தூத்துக்குடி கப்பல் மாலுமியின் குடும்பத்தினருக்கு சிஐடியு நிர்வாகிகள் நேரில் ஆறுதல்
16 Jun 2026, 9:29 pm

ஏமன் நாட்டில் பலியான தூத்துக்குடி கப்பல் மாலுமியின் குடும்பத்தினருக்கு சிஐடியு நிர்வாகிகள் நேரில் ஆறுதல்

தூத்துக்குடி, ஜூன் 16- ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள யுத்த நெருக்கடியால் உயிரிழந்த இந்திய மாலுமிகளுக்குத் தலா 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க சர்வதேச மன்றங்களில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச கடல் வழித்தடத்தில் பயணித்த கப்பலில் உரிய மருத்துவ உதவி கிடைக்காமல் தூத்துக்குடியைச் சேர்ந்த இளம் மாலுமி நிஷாந்த் உயிரி ழந்த சம்பவத்திற்குச் சிஐடியு தொழிற்சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலையும், கப்பல் நிர்வா கத்தின் அலட்சியப் போக்கிற்குத் தனது கடுமையான கண்டனத்தை யும் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சிஐடியு தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம்

ஏமன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ‘எம்.டி செலஸ்டி யஸ்’ வணிகக் கப்பலில் இரண்டாம் நிலை அலுவலராகப் பணியாற்றி வந்தவர் தூத்துக்குடியைச் சேர்ந்த இளம் மாலுமி நிஷாந்த் . கடந்த ஜூன் 11 அன்று அவர் திடீரென சுகவீனமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், அவசரக் கால மருத்துவ உதவி கேட்டு கப்பலில் இருந்து திரும்பத் திரும்ப வேண்டுகோள் விடுத்துள் ளார்.

எனினும், எவ்வித மருத்துவ உதவியும் கிடைக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தேவையான மருத்துவ உதவி வழங்காமல் மாலுமியின் மர ணத்திற்குக் காரணமானதோடு, அவரது உடலை உரிய முறையில் பாதுகாத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பொறுப்பையும் கைவிட்ட கப்பல் நிர்வாகத்தின் மனிதநேயமற்ற செயல் உலக அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் யுத்தப் பதற்றம் காரணமாக, உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தக வழியான ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொ டர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 3 இந்திய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டு 3 இந்திய மாலுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல்களும் இந்த ஆபத்தான நிலைக்கு உதவ முன்வராதது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலுமியின் உடலை மீட்டு கொண்டுவருக

மாலுமி நிஷாந்த் இறந்து 4 நாட்கள் கடந்த பின்பும் அவரது உடலை இந்தியா கொண்டு வருவ தற்கான முயற்சிகள் தாமதமாகி வருகின்றன. தற்போது ஏமனில் உள்ளதாகக் கூறப்படும் அவரது உடலைத் துபாயில் உள்ள இந்திய த் தூதரகம் மூலமாக விரைந்து மீட்டு, இறுதிச் சடங்கிற்காகத் தூத் துக்குடியில் உள்ள அவரது குடும் பத்தினரிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு தூதரக நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.

ஒன்றிய அரசு ரூ.1 கோடி வழங்கிடுக

மாலுமியை இழந்து நிராதர வாக நிற்கும் அவரது வயது முதிர்ந்த பெற்றோர், மனைவி, இரண்டு வயது மகள் மற்றும் 8 மாதக் கைக்குழந்தை கொண்ட குடும்பத்தைப் பாதுகாக்கும் வகை யில் ஒன்றிய அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், தமிழக முதல்வர் இக்குடும்பத்தினரை நேரில் சந்தி த்து ஆறுதல் கூறுவதுடன், நிஷாந்தின் மனைவியின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள யுத்த நெருக்கடியால் உயிரிழந்த இந்திய மாலுமிகளுக்குத் தலா 5 மில்லி யன் டாலர் இழப்பீடு வழங்க சர்வதேச மன்றங்களில் இந்தியா வலியுறுத்த வேண்டும்.

கப்பல் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக

மாலுமியின் மரணத்தில் உள்ள அலட்சியப் போக்கு குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தி, ‘எம்.டி செலஸ்டியஸ்’ கப்பல் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிஷாந்தின் உடலை மீட்கத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இந்திய பார்வேர்ட் சீமேன் யூனியன் (FSUI) பொதுச்செய லாளர் மனோஜ் யாதவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகச் சிஐடியு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலுமியின் குடும்பத்தினருக்கு சிஐடியு நிர்வாகிகள் ஆறுதல்

உயிரிழந்த மாலுமியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தி னரை சந்தித்து சிஐடியு நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரசல், மாவட்ட பொருளாளர் எஸ்.அப்பாதுரை, துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க செயலாளர் கே.காசி, சிஐடியு நிர்வாகிகள் மணவாளன், சங்கரன், ரவி தாகூர், லெனஸ் சிபி எம் மாநகர் செயலாளர் எம். எஸ். முத்து உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.