தூத்துக்குடியில் ரோபோ மூலம் பட்டாசு விற்பனை
3 Nov 2026, 10:15 pm

தூத்துக்குடியில் ரோபோ மூலம் பட்டாசு விற்பனை

தூத்துக்குடி,நவ.3- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பொதுமக்களை கவரும்வகையில் முதல் முறையாக ரோபோ உதவியுடன் பட்டாசு விற்பனை செய்யும் புதிய முயற்சி கவனத்தை ஈர்த்துள்ளது.தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ‘குட்டி ஜப்பான் பட்டாசு கடை’ என்ற கடையில் சிவகாசி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரோபோ ஒன்றின் உதவியுடன் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த ரோபோவின் கையில் பிரத்யேகமாக ஒரு கூடை வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பட்டாசுகளைத் தேர்வு செய்து அந்தக் கூடையில் வைக்கலாம். பட்டாசுகளின் எடை ஒரு கிலோவை எட்டியவுடன், ரோபோதானாகவே அதனை அடையாளம் கண்டு ஒரு கிலோ நிறைவடைந்துவிட்டதாக ஒலியின் மூலம் தகவல் தெரிவிக்கிறது. ஒவ்வொரு கிலோ பட்டாசுக்கும் இதேபோல்தகவல் அளிக்கும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழகம் முழுவதும் 15 கிளைகள் கொண்ட இந்த நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது ஒருகிலோ பட்டாசு என்ற வகையில் அறிமுகம் செய்துள்ளது. ஒரு கிலோ பட்டாசு ரூ.555 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஆர்வமுடன்வாங்கிச் செல்கின்றனர்.இந்த ரோபோ ,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்கி வரும்நிலையில், ரோபோ உதவியுடன் நடைபெறும் இந்தப் பட்டாசு விற்பனையைப் பார்ப்பதற்காகவும், பட்டாசுகளை வாங்குவதற்காகவும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைக்கு வந்து செல்கின்றனர்.