தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி தூத்துக்குடியில் 450 மருந்தகங்கள் மூடல்

20 May 2026, 10:16 pm
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி தூத்துக்குடியில் 450 மருந்தகங்கள் மூடல்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி தூத்துக்குடியில் 450 மருந்தகங்கள் மூடல்

தூத்துக்குடி, மே 20- ஆன்லைன் மருந்து விற்பனை யை முற்றிலுமாகத் தடை செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் மே 20 புதனன்று மாவட்டம் முழுவதும் மருந்தகங்கள் பெரு மளவில் மூடப்பட்டன. ஆன்லைன் மருந்து விற்ப னையை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைனில் முறையற்ற முறை யில் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும்.

புற்றுநோய், இதய நோய் போன்ற உயிர்காக்கும் மருந்து களைத் தரமற்ற முறையில், காலா வதியான மருந்துகளை விற்று மக்கள் உயிரோடு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 450 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாநகர எல்லைக்குட் பட்ட பிரதான வணிகப் பகுதிக ளில் உள்ள மற்றும் மருத்துவமனை களின் அருகாமையில் அமைந் துள்ள சுமார் 150 மருந்து கடைகள் தங்களது விற்பனையை முற்றிலு மாக நிறுத்திப் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளன.

கோவில்பட்டி, சாத்தான்குளம், திருச்செந்தூர், விளாத்திகுளம், உடன்குடி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பிற உள் வட்டாரங்களிலும் 300-க்கும் மேற் பட்ட கடைகள் முழுமையாக அடைக் கப்பட்டுள்ளதால், வணிகர்கள் சங்கத்தின் இந்த அறப்போராட்டம் மாவட்டத்தில் 100 சதவிகிதம் முழு வெற்றியடைந்துள்ளது என்று மாவட்டத் தலைவர் ஜான்பிரிட்டோ மற்றும் செயலாளர் முனுசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.