மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு தனி விளையாட்டு அரங்கம் அமைத்திடுக!
6 Jul 2026, 9:45 pm
<p><strong>மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு தனி விளையாட்டு அரங்கம் அமைத்திடுக!</strong></p><p>தூத்துக்குடி, ஜுலை 6- தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பா கப் பயிற்சி பெறத் தனி உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும், தனியாகக் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திற னாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பாகப் பயிற்சி பெறத் தனி உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பிரத்யேக வசதிகள் செய்து தரக் கோரி, தூத்துக்குடி சிறப்புத் திறனாளிகளின் பாரா விளையாட்டுச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “தடகளம், அமர்வு கைப்பந்து, பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் மாவட்ட வீரர்கள் தேசிய அளவில் சாதித்து வருவதால், அவர்க ளுக்கெனத் தனி உள்விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பிரத்யேக ஆடுகளங்களை அமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் மற்றும் மீனவர்க ளைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கும் தனியாகக் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். முதலமைச்சர் கோப்பை போட்டி களில் ‘அமர்வு கைப்பந்து’ விளையாட்டை இணைக்க விளையாட்டுத் துறை (SDAT) அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சி யர் பரிந்துரைக்க வேண்டும்” என வலி யுறுத்தப்பட்டுள்ளது.</p>
