தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிக எடை சரக்குகளை ஏற்றி வந்த 2 டாரஸ் லாரிகள் பறிமுதல்!

14 Jul 2026, 10:07 pm
அதிக எடை சரக்குகளை ஏற்றி வந்த 2 டாரஸ் லாரிகள் பறிமுதல்!

அதிக எடை சரக்குகளை ஏற்றி வந்த 2 டாரஸ் லாரிகள் பறிமுதல்!

ரூ.90 ஆயிரம் அபராதம்

தூத்துக்குடி, ஜூலை 14 - தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பை பாஸ் சாலையில், விதிமுறை களை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலா கப் பாரம் ஏற்றி வந்த 2 டாரஸ் லாரிகளைப் போக்குவர த்துப் பிரிவு காவல்துறையி னர் பறிமுதல் செய்து அப ராதம் விதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பா ளர் அபிஷேக் குப்தா உத்த ரவின் பேரிலும், தூத்துக்குடி நகரத் துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் ஆலோசனையின் படியும், மாநகரப் போக்குவரத்துச் சரகக் காவல்துறை ஆய் வாளர் சுணை முருகன் தலை மையிலான காவல்துறையி னர் தூத்துக்குடி புதிய துறை முகம் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள எப்சிஐ குடோன் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வஉசி துறைமுகத்திலிருந்து சரக்கு களை ஏற்றி வந்த டாரஸ் லாரிகளை நிறுத்திக் காவல் துறையினர் சோதனையிட்ட னர். இச்சோதனையில், 2 டாரஸ் லாரிகளில் அனும திக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு கூடுதலாக அதிகபாரம் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 2 லாரிகளையும் காவல்துறை யினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். விதி முறைகளை மீறி பாரம் ஏற்றியதற்காக 50 டன்னுக் கும் அதிகமாகப் பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 45 டன் பாரம் ஏற்றி வந்த மற்றொரு லாரிக்கு ரூ. 40,000 அபராதம் விதிக் கப்பட்டது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் செவ்வாயன்று நடத்தப்பட்ட பல்வேறு போக்குவரத்து வாகனச் சோதனைகளில் ஒட்டுமொத் தமாக ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.