தூத்துக்குடியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: 13 ஆய்வறிக்கைகள் தேர்வு
1 Nov 2026, 10:53 pm

தூத்துக்குடியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: 13 ஆய்வறிக்கைகள் தேர்வு

தூத்துக்குடி, நவ.1-தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் 32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.

மாநாட்டை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எஸ். பிரியங்கா துவக்கி வைத்து உரையாற்றினார். அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் மருத்துவர் த. திருநாவுக்கரசு தலைமை வகித்தார். லசால் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருள் சகோதரர் பெரிடேரின் முன்னிலை வகித்தார்.பேராசிரியர் சாந்தகுமாரி வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மா.

சுடலைமணி நன்றி கூறினார்.

மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் வழிகாட்டும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் ஆய்வுகளை சமர்ப்பித்தனர். மாநாட்டில் 13 ஆய்வறிக்கைகள்மாநில அளவிலான தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுஉள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டம் அதிக எண்ணிக்கையிலான அறிவியல் ஆய்வுப் பதிவுகளைச் சமர்ப்பித்து பெருமை சேர்த்து வருவதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. சாந்தகுமாரி தெரிவித்தார்.