தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழுதான மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

31 Dec 2025, 3:37 pm
பழுதான மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
<p><strong>பழுதான மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்</strong></p> <p>தூத்துக்குடி, டிச.31- தூத்துக்குடி மாநகராட்சி யில் பழுதான மின்கம்பங் கள் குறித்து தகவல் தெரி வித்தால் மாற்ற நட வடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநக ராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் &nbsp;நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசிய தாவது : தூத்துக்குடி மாநக ராட்சியில் கடந்த நான்கு &nbsp;ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்து ழைப்பு கொடுத்த கவுன்சிலர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். கடந்த நான்கு ஆண்டு களில் 3000 சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் 90 சதவீதம் நிறை வேற்றப்பட்டுள்ளது. தூத் துக்குடி மாநகராட்சி பகு திகளில் கால்நடைகள் ரோடு களில் பொதுமக்களுக்கு இடையூறாக திரிகிறது. இதனால் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக் கப்பட்டு வந்தது. ஆனால் மாட்டின் உரிமையாளர்கள் தெருக்களில் மீண்டும் மாடு களை விடுகிறார்கள் .இத னால் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க திட்டமிட்டு உள்ளோம். மாடு களை மீண்டும் உரிமை யாளர்களுக்கு கொடுக்க மாட்டோம். தூத்துக்குடியில் 1882 மின்கம்பங்கள் புதிதாக அமைப்பதற்கு அரசுக்கு &nbsp;பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இதற்கான உத்தரவு வந்தவுடன் புதிய மின் கம்பங்கள் நட்டு மின் விளக்குகள் பொருத்தப் படும். மேலும் பழுதான மின்கம்பங்கள் எங்கெ ங்கு உள்ளது என்று கவுன்சி லர்கள் தகவல் தெரிவித்தால் &nbsp;புதிய மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றார். கூட்டத்தில் 22 தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன. பத்திரிக்கை யாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா &nbsp;கூட்டத்தில் அதிமுக கொ றடா வழக்கறிஞர் மந்திர மூர்த்தி பேசியதாவது: &ldquo;தூத்துக்குடியில் பத்திரி க்கையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கு வது சம்பந்தமாக கடந்த கூட்டத்தில் தெரிவித்தி ருந்தேன். தாங்களும் அர சுக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்தீர்கள் விரைவில் அவர்களுக்கு பட்டா கிடை க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஏழை மாணவ மாணவிகள் படி ப்புக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். தேர்வு பயிற்சி மையம் இலவசமாக அமைக்க வேண்டும். இதற் ்காக பிரையன்ட் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமாக இடத்தில் பயிற்சி மையம் அமைக்கலாம். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் விடி சிக்னல் இருந்து திரும்பி செல்வதற்கு போக்குவரத்து மிகவும் இடையூறாக உள்ளது இதனால் மருத்து வமனைக்கு செல்லும் பாதையை ராஜாஜி பூங்கா அருகே மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் தரமற்ற சாலைகள் திமுக உறுப்பினர் சரவ ணகுமார் பேசும்போது &ldquo;தூத்துக்குடி முத்தையா புரம் முள்ளக்காடு பகுதி கள் மாநகராட்சியுடன் புதி தாக இணைக்கப்பட்ட பகுதி யாகும். இங்கு தற்போது புதிதாக ரோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது இந்த ரோடுகள் அனைத்தும் தரம் குறைந்த வாரியாக அமைக்கப்பட்டதால் ரோடு கள் அனைத்தும் பெயர்ந்து வந்து விட்டன. இதனால் போக்கு வரத்துக்கு லாயக்கி ல்லாத ரோடாக உள்ளது. ஒப்பந்ததாரருக்கு பில் பாஸ் பண்ண கூடாது. இந்த ரோடு வேலைகள் அனை த்தும் முடிந்த பின்பு ஆய்வு செய்ய வேண்டும் என்றார். மேலும் கவுன்சிலர்கள் பலர், தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தரும்படி பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.