தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூத்துக்குடியில் மேதின விழா பொதுக்கூட்டம் - பாராட்டு நிகழ்ச்சி

28 May 2026, 11:44 pm
தூத்துக்குடியில் மேதின விழா பொதுக்கூட்டம் - பாராட்டு நிகழ்ச்சி
<p><strong>தூத்துக்குடியில் மேதின விழா பொதுக்கூட்டம் - பாராட்டு நிகழ்ச்சி</strong></p><p>தூத்துக்குடி, மே 28- தூத்துக்குடியில் மேதின விழா வின் பகுதியாக தொழிலாளர்கள் ஒற்றுமை - உரிமைகளை வலி யுறுத்தி பொதுக்கூட்டம் மற்றும் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி துறைமுக ஜன நாயக ஊழியர் சங்க அலுவல கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தொழிலாளர் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி னார். ஆர்.ஆனந்த் முருகன், எஸ்.முருகன் மற்றும் ஆர்.ராஜகுமார் முன்னிலை வகித்தனர். சிஐடியு அகில இந்திய செயலா ளர் ஆர்.கருமலையான் மேதின உரையாற்றினார். மேலும் அகில இந்திய நீர்வழி போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் WTWFI டி.நரேந்திரராவ், WTWFI செய லாளர் ஆர்.ராசல், துறைமுக ஜன நாயக ஊழியர் சங்க பொதுச் செய லாளர் கே.காசி, சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.அப்பாதுரை, மாவட்ட தலைவர் ஆர்.பேச்சி முத்து ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர் நலன், வேலை பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு குறித்து பேசினர். மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற தொழிலா ளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் லேபர் டிரஸ்டி எம்.கோபால் ஆகியோர் மாண வர்களை பாராட்டினர். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தொ ழிலாளர்களுக்கும் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் டிஎஸ்யு பொதுச் செயலா ளர் மீனாட்சி சுந்தரேசன் , டிஎஸ்யு ஆலோசகர் எஸ்.சோமசுந்த ரம் மற்றும் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் சிவநாகரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சிபி எம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் பூமயில், தொழிற்சங்க நிர்வாகிகள், தொழி லாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்ட னர். தொழிலாளர் ஒற்றுமையே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை என வலியுறுத்தி நிகழ்ச்சி நிறைவடைந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.