தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

13 Aug 2026, 10:46 pm
திருச்சி விரைவு செய்திகள்

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்ஒத்திவைப்பு்

தூத்துக்குடி,ஆக.13-தூத்துக்குடியில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறவிருந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், உள்ளூர் விடுமுறை காரணமாக ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதந்தோறும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான முகாம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருந்தது.

எனினும், கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள ‘தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவை’முன்னிட்டு ஆகஸ்ட் 14 தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என்று உதவி இயக்குநர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.

வீடு-வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கிடுக!மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

தென்காசி, ஆக.13-இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027-இன் ஒரு பகுதியாக, வீடு மற்றும் வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு தென்காசி மாவட்டத்தில் 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெற்று வருகிறது.

இக்கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, வீடு மற்றும் வீட்டுப்பட்டியல் தொடர்பான தகவல்களைச் சேகரித்து, அவற்றை கணக்கெடுப்பு செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். கணக்கெடுப்பு பணிக்காக வீடுகளுக்கு நேரடியாக வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு இந்திய அரசால் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு அலுவலர்கள் அடையாள அட்டையுடன், மக்கள் தொகை கணக்கெடுப்பை குறிக்கும் இலட்சினை பொறித்த தொப்பி அணிந்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

எனவே, மேற்கண்ட அடையாளங்களுடன் தங்களது வீடுகளுக்கு நேரடியாக வரும் கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் தேவையான தகவல்களை பொதுமக்கள் வழங்கி, வீடு மற்றும் வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று தென்காசி மாவட்ட முதன்மை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரஞ்ஜீத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

தங்கச் சங்கிலியை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறைகுழித்துறை நீதிமன்றம் தீர்ப்பு

நாகர்கோவில், ஆக.13-கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறத்தில் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கேரளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு குழித்துறை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேல்புறம் பழக்கடையில் பழம் வாங்குவது போல் நடித்து வியாபாரியின் மனைவி கிறிஸ்டினாவின் கழுத்தில் இருந்த 6.5 பவுன் தங்கச் சங்கிலியை ஒரு பெண் பறித்துச் சென்றார். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த செருப்பை வைத்து கேரள மாநிலம் வெள்ளறடை ஆலம்பாறையை சேர்ந்த சாந்தகுமாரி (44) என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் சென்ற சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்த வழக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி சுசின்குமார், சாந்தகுமாரிக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். சதீஷ் விடுதலை செய்யப்பட்டார்.

குளங்கள், கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி, ஆக.13-தூத்துக்குடி மாவட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு குளங்கள், கால்வாய்கள் மற்றும் அணைக்கட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் வியாழனன்று நேரில் சென்று பார்வையிட்டுப் களஆய்வு மேற்கொண்டார்.

நாட்டார் குளம், செய்துங்கநல்லூர் தூதிகுழி குளம், வெள்ளூர் குளம், வெள்ளமடம் தென்கரை குளம், முதலைமொழி குளம் மற்றும் கீழப்புதுக்குளம் கிராமத்தில் உள்ள குளம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்.

செய்துங்கநல்லூர், கால்வாய் கிராமம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள் வழியாகச் செல்லும் மருதூர் மேலக்கால்வாய்/கீழக்கால்வாய் பகுதிகளைப் பார்வையிட்டுத் தூர்வாரும் பணிகள் மற்றும் நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விபரம்

திருநெல்வேலி, ஆக. 13-நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்ட நிலவரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

பிரதான அணையான பாபநாசம் அணையின் தற்போதைய நீர் இருப்பு 83.65 அடியாக உள்ளது. அணைக்கு 615.78 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1104.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

​சேர்வலாறு அணையின் நீர் இருப்பு 96.55 அடியாக பதிவாகியுள்ளது. இங்கு அணையின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் எதுவும் இல்லை. மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு 66.41 அடியாக உள்ளது. அணைக்கு 86.82 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 255 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வடக்கு பச்சையாறு அணையின் நீர் இருப்பு 6 அடி. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை.நம்பியாறு அணையில் நீர் இருப்பு 14 அடி. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை. ​கொடுமுடியாறு அணையில் நீர் இருப்பு 15 அடி. அணையிலிருந்து 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.