தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதில் தொடரும் குளறுபடி! டோக்கன் கொடுத்தும் பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள்! காலக்கெடுவை நீட்டிக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

5 Nov 2026, 10:28 pm
மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதில் தொடரும் குளறுபடி! டோக்கன் கொடுத்தும் பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள்! காலக்கெடுவை நீட்டிக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதில் தொடரும் குளறுபடி! டோக்கன் கொடுத்தும் பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள்!

காலக்கெடுவை நீட்டிக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தூத்துக்குடி,நவ.5-மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதில் தொடரும் குளறுபடியை களைந்து, தினசரி எத்தனை பேருக்கு வழங்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் .காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எம்.எஸ்.முத்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக அரசு பொதுமக்களின் நலனைக்கருத்தில் கொண்டு ரூ.200 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தொகுப்பை வழங்கி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்தத் தொகுப்பு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.ஆனால், தூத்துக்குடியில் இந்த மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.குறிப்பாக, பொருட்களைப் பெறுவதற்காகப் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. காலையிலேயே டோக்கன் வழங்கப்பட்ட நிலையில்,பொருட்களைப் பெறுவதற்கு மாலை 3 மணி வரை பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருந்து சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், தூத்துக்குடியில் இதுவரை சுமார் 800 பேருக்கு மட்டுமே மளிகைப்பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏராளமான தகுதியான குடும்பங்கள் உள்ளன.வியாழனன்று மளிகைப் பொருட்கள் தொகுப்பைப் பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்டவரிசையில் காத்திருந்தனர். ஆனால் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் பலர் மளிகைப் பொருட்கள் கிடைக்காமல் மிகுந்தஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.அரசின் நலத்திட்டத்தைப் பெறுவதற்காக மக்கள் ஆர்வத்துடன் வந்தும்,தினசரி எத்தனை பேருக்கு பொருட்கள் வழங்கப்படும் என்ற முறையான அறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள்அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை பொருட்களைப் பெறாதவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசு அறிவிக்கும் மக்கள் நலத்தட்டங்கள் அனைத்து குடும்பங்களையும் சென்றடைய வேண்டுமே தவிர, நிர்வாகக் குளறுபடிகளாலும் போதிய திட்டமிடல் இல்லாததாலும் மக்கள் பயன்பெற முடியாத நிலை ஏற்படக்கூடாது.கோரிக்கைகள்ரூ.200 மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதற்கான காலக்கெடுவை மேலும் கூடுதல் நாட்களுக்கு நீட்டிக்கவேண்டும். இதுவரை பொருட்களைப் பெறாத அனைத்து தகுதியான குடும்பங்களுக்கும் தொகுப்பு வழங்க வேண்டும்.

அனைவருக்கும் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தினசரி எத்தனை பேருக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்பதை முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். தினசரி வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, மளிகைப் பொருட்கள் தொகுப்பு ழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரிசெய்து, தினசரிவிநியோகத்திற்கான முறையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். கால அவகாசத்தை நீட்டித்து, விடுபட்டுள்ள அனைத்து தகுதியான குடும்பங்களுக்கும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.