தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் பொறுப்பேற்பு
1 Jun 2026, 10:56 pm
<p><strong>தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் பொறுப்பேற்பு</strong></p><p>தூத்துக்குடி, ஜூன் 1: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக மயக்க வியல் துறை பேராசிரியர் டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் திங்களன்று காலை முறைப் படி பொறுப்பேற்றுக்கொண்டார். இங்கு டீனாகப் பணிபுரிந்து வந்த சிவக் குமார் அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொ டர்ந்து, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி யில் மயக்கவியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் புதிய டீனாக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் இன்று மருத்து வக் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது அலு வலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டுப் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அமைச்சருடன் சந்திப்பு புதிய டீனாகப் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவர் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீ நாத்தை நேரில் சந்தித்து, மரியாதை நிமித்தமா கப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பின்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, டாக்டர் பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
