கடலில் தனியார் குழாய் பதிக்கும் திட்டத்தால் மீன்பிடித் தொழில் பாதிப்பு : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே கடலில் படகுகளுடன் மீனவர்கள் போராட்டம்
10 Oct 2026, 10:13 pm

கடலில் தனியார் குழாய் பதிக்கும் திட்டத்தால் மீன்பிடித் தொழில் பாதிப்பு : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே கடலில் படகுகளுடன் மீனவர்கள் போராட்டம்

தூத்துக்குடி, அக்.10-தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் கடற்கரைப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் மூன்று தலைமுறைகளாக மீன்பிடித் தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில், ராம்கி என்ற தனியார் நிறுவனம் மூலம் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கடற்கரைப் பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் கடல் அரிப்பு ஏற்படுவதுடன், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களான பவளப்பாறைகள் சேதமடையக்கூடும் என்று மீனவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு சங்க மாநில பொது செயலாளர் ரீகன், மாநில துணைத்தலைவர் ஜோசப், தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு சங்க தலைவர் ராஜ் ஆகியோர் தலை

மையில், கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நாட்டுப் படகுகளில் கடலுக்குள் சென்று, பைப் பதிக்கும் மிதவை படகை முற்றுகையிட்டு முழக்கங்

்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம் ஒரு மணி நேரமாக நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி துறைமுக செயற்பொறியாளர் ஷீபா, தனியார் நிறுவனமான ராம்கி நிறுவன மேலாளர் பாலமுருகன் , துறைமுக மேலாளர் கிஷோர் ஆகியோர் கொண்ட குழுவினர் போராட்டம் நடத்திய மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் இந்த திட்டம் மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்தே போராட்டம் முடிக்கப்பட்டது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக இதுகுறித்து நாட்டுப்படகு சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ரீகன் கூறுகையில், மூன்று தலைமுறைகளாகக் கடலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள் மீனவர்கள் . இந்த பகுதியில் கடலில் குழாய் பதிப்பதால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது. கடலை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.. கடல் வளங்களும் கடல்சார் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது சம்பந்தமாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, மீனவர்களின் கோரிக்கைகளைக் அதிகாரிகள் கேட்டறிய வேண்டும். எதிர்ப்பையும் மீறி கடலில் குழாய் பதிக்கப்பட்டால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார். (ந.நி)