தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரித்தும் குறையாத விலை மீனவர்கள் மகிழ்ச்சி
10 May 2026, 11:28 pm

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரித்தும் குறையாத விலை மீனவர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி, மே.10- தூத்துக்குடி திரேஸ் புரம் மீன்பிடி துறைமுகத் தில் மீன்கள் வரத்து அதி கரித்துக் காணப்பட்டது.

இருப்பினும், மீன்பிடி தடைக் காலம் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக மீன்களின் விலை குறையா மல் உயர்ந்தே காணப் பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் அம லில் உள்ளதால், நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்று வரு கின்றனர்.

கடந்த சில வாரங்களாகக் கோடை வெயிலின் தாக்கம் காரண மாக மீன்பாடு குறைவாக இருந்த நிலையில், சனிக் கிழமையன்று கரை திரும்பிய மீனவர்களின் வலைகளில் பெரிய அளவி லான மீன்கள் அதிகளவில் கிடைத்தன.

மீன்கள் வரத்து அதிக மாக இருந்தபோதிலும், சந்தையில் நிலவும் தட்டுப் பாடு காரணமாக கடந்த வாரத்தைப் போன்றே விலையில் மாற்றம் இன்றி உயர்ந்து காணப்பட்டது. சீலா மீன் ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரை. விளை மீன், ஊழி, பாறை ரூ. 500 முதல் ரூ. 700 வரை. கேரை மீன் (70-80 கிலோ எடை கொண் டவை) ரூ. 270 முதல் ரூ. 300 வரை. நண்டு ரூ. 700 வரை. சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரை விற்பனையானது.

கோடை விடுமுறை என்பதால் மீன்களை வாங்கு வதற்காகத் திரேஸ்புரம் துறைமுகத்தில் அதிகாலை யிலேயே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதி களவில் திரண்டனர்.

வரத்து அதிகமாக இருந்தும், போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மீன்களை வாங்கிச் சென்றதால் மீனவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல மீன்பாடும், அதே வேளையில் கூடுதல் லாப மும் கிடைத்துள்ளதால் தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் உற்சாகமடைந் துள்ளனர்.