தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து:  பெண் தொழிலாளி பலி; 28 பேர் படுகாயம்

21 Jun 2026, 11:08 pm
பட்டாசு ஆலையில் வெடி விபத்து:  பெண் தொழிலாளி பலி; 28 பேர் படுகாயம்
<p>பட்டாசு ஆலையில் வெடி விபத்து: &#160;பெண் தொழிலாளி பலி; 28 பேர் படுகாயம்</p><p>​​​​​​​தூத்துக்குடி, ஜூன் 21: எட்டயபுரம் அருகே புதிதாகத் தொடங்கப்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் தொழிலாளி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும் 28 பேர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி எட்டக்காப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்குச் சொந்த மான பட்டாசு ஆலை, தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தை அருகே ராசாபட்டியில் கடந்த ஒரு வாரத் திற்கு முன்புதான் திறக்கப்பட்டது. சனிக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில், இந்த ஆலையின் மருந்துக் கலவை அறையில் எதிர் பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 4 உற்பத்தி அறைகளும் இடிந்து தரைமட்டமாகின. தக வல் அறிந்து மாசார்பட்டி போலீ சார் மற்றும் கோவில்பட்டி, விளாத்தி குளம், சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சாத்தூர் நத்தத் துப்பட்டியைச் சேர்ந்த வெள்ளை யப்பன் மனைவி மாரியம்மாள் (48) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அப்பையநாயக்கன்பட்டி முனியம்மாள் (50), பாக்கியலட்சுமி (46), நத்தத்துப்பட்டி மாரிமுத்து, வாழவந்தாள் (40), சாந்தி (53), ராமு (58), காசிலிங்கபுரம் தங்கபாண்டி, சின்னவநாயக்கன்பட்டி ராமர் உட்பட 28 தொழிலாளர்கள் படுகாய மடைந்தனர். காயமடைந்தவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்; பலத்த காயமடைந்த 3 பேர் மேல்சிகிச்சைக் காக விருதுநகர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா, விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தர பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசா ரணை நடத்தினர். விளைநிலங் களுக்கு அருகே பட்டாசு ஆலை களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மக்கள் போராடி வரும் நிலை யில், இந்த விபத்து கிராம மக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஆலை உரிமையாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு இவ்விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் ஆலை உரிமையாளர் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதனிடையே, ஞாயிற்றுக் கிழமை நெல்லை சரக டி.ஐ.ஜி. திரு நாவுக்கரசு, வட்டாட்சியர் சுபா மற்றும் டிஎஸ்பி சுந்தரபாண்டியன் ஆகியோ ருடன் இணைந்து விபத்து நடந்த ஆலையில் நேரில் ஆய்வு மேற்கொண் டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.