தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயிர் கடன் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

27 May 2026, 10:47 pm
பயிர் கடன் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பயிர் கடன் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தூத்துக்குடி, மே 27- உர விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய மற்றும் தமிழக அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தூத்துக் குடி விவிடி சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரா.ராக வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பா.புவிராஜ் மற்றும் லெனின் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றி, விவ சாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்கள், உயர்ந்து வரும் உற்பத்தி செலவுகள், பயிர் சேதம் மற்றும் கடன் சுமைகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு விவசாயிகளின் பயிர் கடன்களை முழு மையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், ஐம்பதாயிரம் வரை மட்டுமே தள்ளு படி செய்யப்படும் என கூறிய தமிழ்நாடு அரசு அந்த உத்தரவை திரும்ப பெற்று விவ சாயிகளை ஏமாற்றாமல் முழுமையாக கடனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி கள் நம்பிராஜன், பிச்சையா, கணேச மூர்த்தி, முரளிதரன், பி.சீனிவாசன், மணி, ஜி.ராமசுப்பு, செல்வராஜ், அசோக் குமார், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.