தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட மாநாடு கோரிக்கை
14 Jul 2026, 10:06 pm
<p><strong>தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட மாநாடு கோரிக்கை</strong></p><p>தூத்துக்குடி, ஜுலை 14 - தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் தூத்துக்குடி மாவட்ட 24 ஆவது மாநாடு கோவில்பட்டியில் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடை பெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ராகவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் விவ சாயிகள் சங்க கொடி ஏற்றி வைத்தார். வரவேற்பு குழு தலைவர் ஜார்ஜ் நியூட்டன் வர வேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ராமசுப்பு அஞ்சலி தீர்மானம் முன்மொ ழிந்தார். மாவட்டச் செயலாளர் புவிராஜ் வேலை அறிக்கையும், மாவட்டப் பொருளாளர் நம்பி ராஜன் வரவு-செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து மாநாட்டை துவக்கி வைத்து மாநிலப் பொரு ளாளர் கே.பி.பெருமாள் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் கு.ரவீந்திரன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் மணி என்ற சுப்பையா நன்றி கூறினார். மாவட்டத் தலைவராக ராக வன், செயலாளராக புவிராஜ், பொருளாளராக நம்பிராஜன், துணைத் தலைவராக சீனிவாசன், கணபதி, ராமசுப்பு, பாலமுருகன், துணைச் செயலாளராக மணி (எ) சுப்பையா, செல்வராஜ், மணி, பத்மாவதி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உட்பட 35 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தீர்மானங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை பழைய முறையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய திட்டத்தை மாற்றி சட்டம் இயற்றிட வேண்டும். தேர்தல் காலத்தில் தவெக அரசு வாக்கு றுதி அறிவித்ததன்படி, பயிர்க் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து தூய்மைப்படுத்த வேண்டும். நெல், கோதுமை, பருத்தி போன்ற பயிர்களுக்கு விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அரசு அறி வித்த விலையை உத்தரவாதப் படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு தூத்துக்குடியில் செப்டம்பர் 27,28 ,29 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளது. இதனை சிறப்பாக நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது.</p>
