தூத்துக்குடியில் விசாரணைக் கைதி மரணம்; சிபிஎம் கண்டனம்! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு வலியுறுத்தல்!!
23 Jul 2026, 8:58 pm

தூத்துக்குடியில் விசாரணைக் கைதி மரணம்; சிபிஎம் கண்டனம்! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு வலியுறுத்தல்!!

தூத்துக்குடி, ஜூலை 23 - தூத்துக்குடியில் விசாரணைக் கைதி மரணம் அடைந்துள்ள சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது:

பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது!

தூத்துக்குடி நகரம், அமுதாநகர் பகுதியைச் சார்ந்த டாஸ்மாக் ஊழியரான அருணாச்சலம் (24) என்ற இளைஞர், சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக கூறி, அவரை தென்பாகம் போலீசார் 17.07.2026 அன்று காலையில் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அன்று மாலையே தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயங்களு டன் மருத்துவமனையில் காவ லர்களால் அனுமதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், வேதனையை யும் அளிக்கிறது. உயிரிழந்த அருணாச்சலம் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாக்குமூல வீடியோவும் பெற்றோர் குற்றச்சாட்டும்...

அருணாச்சலம் உயிரிழப்பதற்கு முன்பு போலீசார் தன்னைத் தாக்கியதாக கூறும் வாக்குமூல வீடியோ வெளியாகி உள்ளது. தாளமுத்துநகர் காவல்நிலைய காவலரும்,