தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிஎஸ்ஆர் நிதி மூலம் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் புதிய இணையதள சேவை அறிமுகம்

13 Jul 2026, 9:46 pm
சிஎஸ்ஆர் நிதி மூலம்  மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் புதிய இணையதள சேவை அறிமுகம்
<p><strong>சிஎஸ்ஆர் நிதி மூலம் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் புதிய இணையதள சேவை அறிமுகம்</strong></p><p>தூத்துக்குடி, ஜுலை 13 - தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கான முன்னுரி மைத் திட்டங்களை அரசு மற்றும் தொழில் நிறுவ னங்கள் இணைந்து செயல் படுத்துவதற்காக உருவாக்கப் பட்டுள்ள புதிய இணையதள சேவை தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா, மீன்வளம் மற்றும் மீன வர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் விஷூ மகா ஜன் தலைமையில் தூத்துக் குடி மாவட்ட நிர்வாக சங்க இணையதள சேவையினைத் துவக்கி வைத்தனர். சமூகப் பொறுப்புணர்வு நிதியின் (CSR) மூலம் மாவட்ட வளர்ச்சிக்கான தேவைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்பு களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். மாவட்ட முன்னேற்றத்திற் காக, மாவட்ட நிர்வாகத்திற்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைச்சர்கள் முன்னிலையில் மேற்கொள் ளப்பட்டன. இதன்படி, NDSO நிறுவனம், APRIL நிறுவனம், NLC TamilNadu Power Ltd ஆகிய நிறுவனங்களுடன் தூத்துக்குடி மாவட்ட நிர்வா கம் உடன்படிக்கை பரி மாற்றங்களை செய்து கொண்டது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் NLC Tamil Nadu Power Ltd நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதியிலி ருந்து ரூ.13.25 லட்சத்தில் மேஜை மற்றும் நாற்கா லிகள் தூத்துக்குடி சமூக நீதி பள்ளி மாணவர் விடுதிக்கு வழங்கப்பட்டன. அமைச் சர்கள் இப்பொருட்களை விடுதி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சி.பிரியங்கா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுரு வான், மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் மற்றும் பொது மேலாளர் சொர்ண லதா உட்பட அரசு அலு வலர்கள் பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.