தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆக.3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

20 Jul 2026, 10:17 pm
ஆக.3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஆக.3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தூத்துக்குடி, ஜுலை 20 - தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூட்டுறவுத் துறையில் உள்ள குளறுபடிகளைக் களைந்து உரிய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர்களின் நியாயமான பணிப் பாதுகாப்பு மற்றும் எதிர்காலச் சலுகைகளைத் துறை ரீதியாக உறுதி செய்ய வேண்டும். சங்க விதிகளுக்குப் புறம்பான பணி அழுத்தங்களை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்டக் கிளை சார்பில் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளைத் தமிழக முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் இப்போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. திங்களன்று தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய மற்றும் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பாகப் பணியாளர்கள் திரண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களும் பங்கேற்கும் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் கிளை நிர்வாகிகள், மகளிர் பணியாளர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.