தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பயன்பாடின்றி முடங்கிய பேட்டரி கார் சேவை!
6 Jul 2026, 9:44 pm
<p><strong>தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பயன்பாடின்றி முடங்கிய பேட்டரி கார் சேவை!</strong></p><p>தூத்துக்குடி, ஜுலை 6 - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்குப் பேட்டரி கார் சேவை தடையின்றிக் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் எளிதாக அணுகும் வகையில் பல்வேறு சிறப்பு வசதி கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் பேட்டரி கார் வசதி பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்களன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நடக்க முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர், வளாகத்தின் நுழைவாயிலில் இருந்து நீண்ட தூரம் மிகுந்த சிரமத்துடன் தட்டுத் தடுமாறி நடந்து அலுவலகத்திற்குள் வந்துள்ளார். அலுவலக வளாகத்தில் பேட்டரி கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலும், அது மாற்றுத் திறனாளியின் பயன்பாட்டிற்கு வராதது அங்கிருந்த பொது மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்படுத்தி யது. மாற்றுத் திறனாளிகளுக்கான இத்தகைய சிறப்புச் சேவைகளின் செயல்திறன் குறித்துப் பல்வேறு தரப்பிலும் தற்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தொ டர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலை யிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பேட்டரி கார் சேவை முறையாகச் செயல்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இதில் ஊழியர்க ளின் அலட்சியம் இருந்தால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள் ளனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற அவலங்கள் நடைபெறாத வகையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்குப் பேட்டரி கார் சேவை எப்போதும் தடையின்றிக் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரி யுள்ளனர்.</p>
