மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்
17 Jul 2026, 10:26 pm

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, ஜூலை 17- இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு- 2027 இன் முதற்கட்டப் பணிகளான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, மற்றும் பொதுமக்களுக்கான இணையவழிச் சுய- கணக்கெடுப்பு (Self-Enumeration) முறையி னைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் முதன்மை மக்கள் தொகை கணக் கெடுப்பு அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெள்ளியன்று தொடங்கி வைத் தார்.

இணையவழிச் சுய-கணக்கெடுப்பு முறைகள்:

கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக வந்து விவரங்களைச் சேகரிக்கும் முறை ஒருபுற மிருக்க, பொதுமக்கள் தங்களது குடும்ப விவ ரங்களைச் சுய-கணக்கெடுப்பு மூலம் இணைய வழியில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை பதிவேற்றலாம்.

இதற்காகப் பொதுமக்கள் [https://se.census.gov.in](https://se.census.gov.in) என்ற இணையதளத்தில் உள்நுழைந்து, தமிழ் நாடு மாநிலத்தைத் தேர்வு செய்து, கேப்சா குறி யீடு மற்றும் OTP சரிபார்ப்பு மூலம் குடும்ப விவ ரங்களை உள்ளிட வேண்டும். அமைவிட விவ ரங்களை உள்ளிட்ட பின், டிஜிட்டல் வரைபடத் தில் தோன்றும் சிவப்பு குறியீட்டை இழுத்து குடியிருப்புக் கட்டிடத்தின் சரியான இருப்பி டத்தை உறுதி செய்ய வேண்டும். பதில்கள் வெற்றிகரமாகச் சமர்ப்பிக் கப்பட்டதும், 12 இலக்கச் சுய-கணக்கெடுப்பு ஐடி (Self-Enumeration ID) குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்ப டும். கணக்கெடுப்பாளர்கள் கள வருகையின் போது இந்த ஐடி-யைப் பெற்றுத் தரவைச் சரி பார்ப்பர். பொதுமக்கள் சுய-கணக்கெடுப்பு செய் வதற்கான வழிகாட்டு விடியோ தேசிய தகவலி யல் மையத்தின் (NIC) [https://thoothukudi.nic.in](https://thoothukudi.nic.in) என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை

மின்னணு முறையில் பெறப்படும் இத்தரவு களின் அடிப்படையிலேயே கிராமம், நகரம் மற்றும் வார்டு மட்டத்திலான அடிப்படை வசதி கள், குடும்ப சொத்துக்கள், கல்வி, மதம், பட்டி யல் மற்றும் பழங்குடியினர் விவரங்கள், மொழி கள், இடப்பெயர்ச்சி உள்ளிட்ட சமூக-பொருளா தாரப் பரிமாண நுண்ணிய தகவல்கள் பெறப் பட்டு வருங்கால நலத்திட்டங்கள் வடிவமைக்கப் படும்.

சுய-கணக்கெடுப்புப் பதிவுகளில் சந்தே கங்கள் ஏதேனும் இருப்பின், கட்டணமில்லா எண் 1855 அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்களான 0461-2340099, 9486454714 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்து உள்ளார்.