தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்கள் குறைதீர் கூட்டம் தூத்துக்குடியில் 485 மனுக்கள் அளிப்பு

8 Jun 2026, 9:56 pm
மக்கள் குறைதீர் கூட்டம்  தூத்துக்குடியில் 485 மனுக்கள் அளிப்பு
<p><strong>மக்கள் குறைதீர் கூட்டம் தூத்துக்குடியில் 485 மனுக்கள் அளிப்பு</strong></p><p>தூத்துக்குடி, ஜூன் 8 - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை யில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 485 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கத் துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தி ருந்த பொதுமக்களிடமிரு ந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டத் தின்கீழ் புதிய வீடு வேண்டு தல், தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கி யத் தேவைகள் அடங்கிய 485 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சி யர் விஷு மகாஜன், ஒவ்வொரு மனுவையும் தனித்தனியாக ஆய்வு செய்து, அவற்றின் மீது மிக விரைவாகவும் உரிய முறையிலும் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்குக் அறிவுறுத்தல்களை வழங்கினார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்திற்கு வந்திருந்த மாற்றுத் திறனாளிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் சென்று சந்தித்தார். அவர்களின் பல்வேறு கோரி க்கைகள் அடங்கிய 23 மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவர், அவர்க ளின் குறைகளையும் தேவை களையும் கனிவுடன் கேட்ட றிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட இயக்க மேலா ண்மை அலகு (மகளிர் திட்டம்) சார்பாகத் தூத்துக் குடி மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்பு கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், பகுதி அள விலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் என மொத்தம் 9 சமுதாய கூட்ட மைப்புகளுக்கு மாநில அரசின் உயரிய ‘மணி மேகலை விருதுக்கான’ பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார். மேலும், இவ்விருதை வென்ற கூட்டமைப்புக ளுக்கு மொத்தப் பரிசுத் தொ கையான ரூ.4 லட்சம் மதிப் பிலான காசோலையையும் (Cheque) அவர் வழங்கி னார். உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரமணன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாய கம் மற்றும் மாவட்டத்தின் அனைத்துத் துறை சார்ந்த முதன்மை அரசு அலுவலர் கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.