தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநில ஸ்குவாஷ் போட்டியில் வென்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!

1 hour before
மாநில ஸ்குவாஷ் போட்டியில்   வென்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!

மாநில ஸ்குவாஷ் போட்டியில் வென்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!

தூத்துக்குடி, நவ.15-தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட Game Ville ஸ்குவாஷ் மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின ஸ்குவாஷ் போட்டிகளில் (2026-27) வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகையில், “ஸ்குவாஷ் போட்டி 1830-ஆம் ஆண்டு இங்கிலாந்து, லண்டனில் உள்ள ஹாரோ பள்ளி மாணவர்களால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. சுவரில் பந்தை அடித்து விளையாடும் பழைய விளையாட்டே இதற்கு அடிப்படையாகும். தற்போது சர்வதேச அளவில் மாஸ்டர் போட்டியாக உருவெடுத்துள்ள இப்போட்டியில் இவ்வளவு மாணவர்கள் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்குவாஷ் போட்டி 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகப்ப டுத்தப்படவுள்ளது. மாணவர்கள் உங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் இதில் பங்கேற்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் நம்பிக்கையுடன் பங்கேற்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். போட்டிகளில் விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். வென்ற மாணவர்கள் அடுத்த கட்டத்திற்குத் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு சாதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சங்கீதா சின்னராணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சு.கண்ணதாசன், Game Ville ஸ்குவாஷ் மைதான தாளாளர் ரயிபின், மற்றும் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் எனப் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.