முந்தய பக்கம்

குரூப்-1 தேர்வு தூத்துக்குடியில் 79 சதவீதம் பேர் பங்கேற்பு

27 Sept 2026, 10:39 pm
குரூப்-1 தேர்வு  தூத்துக்குடியில் 79 சதவீதம் பேர் பங்கேற்பு

குரூப்-1 தேர்வு தூத்துக்குடியில் 79 சதவீதம் பேர் பங்கேற்பு

தூத்துக்குடி, செப்.27-தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்காக மொத்தம் 5,143 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். 18 மையங்களில் 4,047 பேர் தேர்வை எழுதினர். 1,096 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 79 சதவீதம் தேர்வர்கள் தேர்வை எழுதியுள்ளனர். 21 சதவீதம் பேர் தேர்வெழுத வரவில்லை.தேர்வு மையங்களுக்கு வந்த தேர்வர்கள் அனைவரும் காவல்துறையினர் மற்றும்கண்காணிப்பாளர்களின் கடும் சோதனைக்குப் பின்னரே தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்படி, காலை சரியாக 8.59 மணிக்குத் தேர்வு மையங்களின் பிரதான நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டன. இதனால் தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாமல்மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப்-1முதல்நிலைத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். ஆய்வின் போது தேர்வு கண்காணிப்பாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram