அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க தூத்துக்குடி மாவட்ட பேரவை
8 Aug 2026, 11:08 pm

அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க தூத்துக்குடி மாவட்ட பேரவை

தூத்துக்குடி, ஆக.8-தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட 9 ஆவது பேரவை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

பேரவைக்கு மாவட்ட தலைவர் திரவியம் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் இல.ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சேவியர்எக்ஸ்பெர்ட் ஜெபஸ்டியன் ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் ந.வெங்கடேசன் துவக்கி வைத்துப் பேசினார் .அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தே.முருகன் வாழ்த்திப் பேசினார். ஓய்வூதியர் சங்கத்தின்மாநிலச் செயலாளர் முனைவர் சு. கிருஷ்ணன் நிறைவுரையாற்றினார்.மாநிலச் செயற்குழு உறுப்பினர் வே.முருகன் நன்றி கூறினார் .

பேரவையில் மூத்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் இல்லாமல்உடல் பரிசோதனை செய்வதற்கு வழிவகை செய்திட வேண்டும். தூத்துக்குடி மாநகரக்குள் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் ரயில் நிலையத்தையும் பழைய பேருந்து நிலையத்தையும் மாநகருக்கு வெளியே பொதுமக்கள் சுலபமாக பயன்படுத்தக்கூடிய பகுதியில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.