தூத்துக்குடி 1-ஆம் கேட் பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
1 Jun 2026, 10:58 pm
<p><strong>தூத்துக்குடி 1-ஆம் கேட் பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்</strong></p><p>தூத்துக்குடி, ஜூன் 1- தூத்துக்குடி ரயில் நிலையம் 1-ஆம் கேட் முன்பு பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ள த்தை மூடி, சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் இசக்கி செல்வ லட்சுமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மாநகராட்சி ஆணைய ருக்கு அனுப்பியுள்ள மனுவில், “மாநகராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகப் பல மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட பெரிய பள்ளம், பணிகள் முடிந்த பின்னரும் இன்று வரை மூடப்படாமல் உள்ளது. இத னால் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகு தியில் ரயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்படுவதால், பொதுமக்கள் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது” என்று குறிப் பிட்டுள்ளார். இப்பகுதியைச் சுற்றி ஏராளமான பள்ளிகள் அமை ந்துள்ளதாலும், இன்னும் இரண்டு நாட்களில் கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாலும், பள்ளி மாணவர்களின் பயண சிரமத் தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்த ஆபத்தான பள்ளத்தை உடனடியா கச் சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
