குடிநீர் வழங்கக் கோரி தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை
17 Jul 2026, 9:42 pm
<p><strong>குடிநீர் வழங்கக் கோரி தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை</strong></p><p>இராமநாதபுரம், ஜூலை.17 இராமநாதபுரம் மாவட்டம், திருவாட னை வட்டம், தொண்டி பேரூராட்சியின் 5-வது வார்டில் கடந்த 10 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக் கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய பொதுமக்கள், வெள்ளிக் கிழமையன்று காலிக்குடங்களுடன் தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தற்காலிகமாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப் படும் என்றும், பழுதடைந்த குடிநீர் விநி யோக மின் இயந்திரங்களை விரைவில் சீரமைக்கப்படும் என்றும் உறுதிய ளித்தனர். இருப்பினும், “வெள்ளிக்கிழமை மாலைக்குள் சீரான குடிநீர் விநியோகம் தொ டங்கவில்லை என்றால், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் ம்” என பொது மக்கள் தெரிவித்து, கலைந்து சென்றனர். தொடர்ந்து நீடித்து வரும் குடிநீர் பிரச்ச னைக்கு மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப் பட்ட துறையும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.</p>
