தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாமஸ் ஹார்டி - மத நம்பிக்கைகளை அசைத்த எழுத்துகள்! - பேரா பெ.விஜயகுமார்

13 Jun 2026, 7:37 pm
தாமஸ் ஹார்டி - மத நம்பிக்கைகளை அசைத்த எழுத்துகள்! -  பேரா பெ.விஜயகுமார்

தாமஸ் ஹார்டி - மத நம்பிக்கைகளை அசைத்த எழுத்துகள்! - பேரா பெ.விஜயகுமார்

ஆங்கில இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் கவிஞர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவலாசிரியர் என்று சற்று வினோதமாக தாமஸ் ஹார்டி (1840-1928) கொண்டாடப்படுகிறார். ஏராளமான கவிதைகளும், ‘தி ரிடர்ன் ஆஃப் தி நேட்டிவ்’, ‘ஜுடு தி அப்ஸ்கியூர்’, ‘தி மேயர் ஆஃப் கேஸ்டர் பிரிட்ஜ்,’, ‘டெஸ் ஆஃப் தி டர்பர்வில்’, ‘உட்லாண்டர்ஸ்’, ‘தி டரம்பட் மேஜர்’, ‘ஃபார் ஃப்ரம் தி மேடிங் கிரவ்டு’ போன்ற பதினான்கு நாவல்களும், முப்பது சிறுகதைகளும் தாமஸ் ஹார்டி எழுதியுள்ளார். விக்டோரியா ராணி காலத்தில் அவர் பிறந்து வளர்ந்த இங்கிலாந்தின் வெசக்ஸ் (Wessex) பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளைச் சித்தரிப்பதால் ‘வெசக்ஸ் நாவல்கள்’ என்று ஹார்டியின் நாவல்கள் அழைக்கப்படுகின்றன. ஹார்டி தொடக்கத்தில் கட்டடக் கலையில் ஆர்வங்கொண்டு தேவாலயங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டார். பின்னர் அத்தொழிலை விட்டுவிட்டு தான் பிறந்த ஊரான டார்செட்டில் குடியேறி சிறந்த எழுத்தாளராகப் பரிணமித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்து நிறைய முரண்பாடுகளைச் சந்தித்த காலமாகும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், சமூகம் கொண்டிருந்த நம்பிக்கைகளை எல்லாம் அசைத்துப் பார்த்த காலம். பகுத்தறிவுச் சிந்த னைகள் மதக் கோட்பாடுகளைக் கேள்விக் குறியாக்கிய காலம். மனித குலம் இதுவரை உயர்த்திப் பிடித்த அறநெறிகளை எல்லாம் மக்கள் சந்தேகத்துடன் பார்க்கத் துவங்கிய காலம். தாமஸ் ஹார்டி இம்முரண்பாடு களுக்குள் சிக்கித் தவித்த மக்களைக் கதா பாத்திரங்களாக மாற்றி நாவல் இலக்கியம் படைத்த மாபெரும் படைப்பாளி.

டைட்டானிக்கும் டைனாய்ட்டும்

ற்றாண்டையும், கவிதைகள் இருபதாம் நூற்றாண்டையும் பிரதிபலிக்கின்றன. ஆம்! 1871-1895 கால இடைவெளிக்குள் பதினான்கு நாவல்கள் எழுதிய ஹார்டி நூற்றாண்டின் திருப்பத்தில் கவிதைக்கு நகர்ந்து அதிலும் வெற்றி பெற்றார். 1898இல் ‘வெசக்ஸ் கவிதைகள்’ தொகுப்பு வெளியாகி கவிதை ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது. மனித குலத் தின் மிகப் பெரிய சாதனையாகவும், மூழ்கடிக்க முடியாத கப்பலாகவும் பெருமையுடன் கருதப் பட்ட டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கிய சோகத்தை ‘தி கன்வெர்ஜன்ஸ் ஆஃப் தி ட்வைன்’ என்ற கவிதையில் வடித்தார்.

போரின் கொடுமையை ‘தி மேன் ஹி கில்டு’ எனும் கவிதையில் தாமஸ் ஹார்டி சித்தரிக் கிறார். 1803-1815 ஆகிய ஆண்டுகளில் நடந்த பிரான்ஸ் அதிபர் நெப்போலியனுக்கு எதிரான போரில் எண்ணற்ற போர் வீரர்கள் கொல்லப் பட்டனர். ஆணவமிக்க ஆட்சியாளர்களின் மண்ணாசைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத இரண்டு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதை இக்கவிதையில் உணர்ச்சிப் பூர்வ மாகக் காட்சிப்படுத்துகிறார் தாமஸ் ஹார்டி.

‘தி வாய்ஸ்’ கவிதையில் தன் மறைந்த மனைவி ‘எம்மா’ பேசும் குரலைக் கேட்கும் பிரம் மையில் தவிக்கிறார். அவரின் நினைவுகளில் மூழ்குகிறார். அதேபோல் ‘ஆஃப்டர் எ ஜெர்னி’ என்ற கவிதையில் கார்ன்வால் மலைப்பகுதி யில் தன் அன்பு மனைவியுடன் சுற்றித் திரிந்த நாட்கள் அவர் நினைவில் நிழலாடுகின்றன. இறுதியில் இதிகாச வடிவில் எழுதப்பட்ட ‘டை னாஸ்ட்’ கவிதை ஐரோப்பா முழுவதையும் பாதித்த ‘நெப்போலியானிக் போர்’ என்றழைக் கப்பட்ட போரின் கொடுமைகளைச் சித்தரிக் கிறது. கவிதை, நாடகம், வரலாறு மூன்றும் இணையும் உன்னத படைப்பான ‘டைனாஸ்ட்’ அவருக்குப் பெரும் புகழைத் தந்தது.

தடைசெய்யப்பட்ட 2 நாவல்கள்

ஹார்டியின் கடைசி இரு நாவல்களான டெஸ் ஆஃப் தி டர்பர்வில் (1891) மற்றும் ஜூடு தி அப்ஸ் கியூர் (1895) மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. கத்தோலிக்கத் திருச்சபை இவ்விரு நாவல்களையும் கிறித்தவ எதிர்ப்பு நாவல்கள் என்றழைத்துத் தடை செய்தது. வேல்ஃபீல்டு சர்ச் பாதிரியார் வெக்ஸம் நாவல் களை எரித்துச் சாம்பாலக்கினார். “நல்ல வேளை நான் அவரிடம் சிக்கவில்லை, இருந்திருந்தால் என்னையும் சேர்த்து எரித்திருப்பார் என்று ஹார்டி நகைச்சுவையாகக் கூறினார். நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னரே கத்தோலிக்கத் திருச்சபை இந்தத் தடையை நீக்கியது

டெஸ், ஜூடு தி அப்ஸ்கியூர் இரு நாவல்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிந்தனை ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் நாவல்கள். மத நம்பிக்கைகளை அசைக்கத் தொடங்கிய சமூகம் அது. திருமண பந்தத்தின் புனிதத்தைக் கேள்வி கேட்ட சமூகம் அது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை நம்ப மறுத்த சமூகம் அது. எனவே கத்தோ லிக்கத் திருச்சபை இவ்விரு நாவல்களையும் அன்று தடை செய்ததில் வியப்பில்லை. இன்று தடையை விலக்கிக் கொண்டதிலும் வியப் பில்லை. துன்பியல் நாவல்களான டெஸ், ஜூடு தி அப்ஸ்கியூர் இரு நாவல்களையும் கனத்த மனதுடனேயே படிக்க முடியும். தாமஸ் ஹார்டி யின் நாவல்கள் கிரேக்க துன்பியல் காவியங் களுக்கு இணையானவை என்பதில் ஐய மில்லை.

கதாபாத்திரமாகும் இயற்கை

ஹார்டியின் நாவல்கள் கிரேக்க செவ் வியல் நாடகங்கள் போல் கால ஒழுங்கையும், இட ஒழுங்கையும் செவ்வனே கடைப்பிடிக் கின்றன. ஹார்டி நாவல்களில் இயற்கையும் முக்கிய கதாபாத்திரமாகிறது. மனித வாழ் வில் இயற்கை தவிர்க்க முடியாத பங்கு வகிக் கிறது என்பதில் ஹார்டி ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தி ரிடர்ன் ஆஃப் தி நேட்டிவ் நாவலின் எக்டன் ஹீத் எனும் வறட்சியான நிலம், டெஸ் நாவலின் பிளாக்மூர் எனும் பண்ணைகள் நிறைந்த பள்ளத்தாக்கு, உட்லாண்டர்ஸ் நாவ லின் மரங்கள் அடர்ந்த காடு, ஜூடு தி அப்ஸ்கியூர் நாவலின் கிரைஸ்ட்மின்ஸ்டர் நகரம் இவை எல் லாம் கதையின் போக்குகளுக்குப் பொருத்த மான களங்களாக அமைத்துள்ளன. மனிதர் கள் எப்போதும் அவர்கள் வாழும் மண்ணின் மைந்தர்களாகவே இருக்கின்றனர். மனிதர் களின் வாழ்விடம் அவர்கள் வாழ்வியல் முறை களில் பிரதிபலிப்பது இயற்கையின் நியதி என்பதன் சாட்சியமாக ஹார்டியின் நாவல்கள் திகழ்கின்றன.

ஹார்டியின் நாவல்களில் விதியின் விளை யாட்டிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கும் மாந்தர்களைச் சந்திக்கிறோம். டெஸ் ஆஃப் தி டர்பர்வில் நாவலின் நாயகி டெஸ் செல்லுமிட மெல்லாம் அவளை விதி வாட்டுகிறது. துயரம் நிழல்போல் துரத்துகிறது. நாவலின் இறுதியில் டெஸ் தூக்கிலிடப்படுவது துயரத்தின் உச்சம். “மனிதர்களை ஆட்டிவைக்கும் அந்த அலகிலா விளையாட்டுடையான் இறுதியாக டெஸ்ஸுடன் விளையாடுவதை நிறுத்திக் கொண்டான்” என்ற நாவலின் கடைசி வரி படிப்பவர் மனதை நெகிழச் செய்கிறது.

பொருந்தா திருமணங்கள்

தாங்கள் விரும்பும் வாழ்வை வாழ முடியா மல் ஏங்கும் மனிதர்களின் ஏக்கங்களையே ஹார்டி தன்னுடைய நாவல்களில் சித்தரிக் கிறார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்ற நம்பிக்கை கொண்ட சமூகத் தில் வாழ்ந்த ஹார்டியின் நாவல்களில் பொருந் தாத் தம்பதியர்களையே சந்திக்கிறோம். தி ரிடர்ன் ஆஃப் தி நேட்டிவ் நாவலில் தாமசினைக் கைப்பிடித்த வைல்டீவ் மனதில் யூஸ்டேசியா வீற்றிருக்கிறாள். கிளிம் யோபிரைட்டைத் திருமணம் செய்த யூஸ்டேசியா மனதில் வைல்டீவ் வீற்றிருக்கிறான்.

‘டெஸ் ஆஃப் தி டர்பர்வில்’ நாவலில் டெஸ் தான் நேசிக்கும் ஏஞ்சல் கிலேருடன் வாழ முடிய வில்லை. விதியின் பிடியில் சிக்கி அலெக் டர்பர்வில்லுடன் வாழ நேரிடுகிறது. ‘ஜூடு தி அப்ஸ்கியூர்’ நாவலில் ஜூடு தனக்குக் கொஞ்ச மும் பொருத்தமில்லாத அரபெல்லா என்ற படிப் பறிவு இல்லாத பெண்ணைத் திருமணம் செய்து இன்னலுக்கு ஆளாகிறான். கதையின் நாயகி சூ பிரைடும் அவளுக்குப் பொருத்தமில்லாத ஃபிலோஸ்டனை திருமணம் செய்துகொள்ளும் தவறினைச் செய்கிறாள். ‘ஃபார் ஃப்ரம் தி மேடிங் க்ரவ்டு’ நாவலில் பாத்ஷீபா எவர்டீன் தன்னைக் காதலிக்கும் மூவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் தடுமாறு கிறாள்.

‘உட்லாண்டர்ஸ்’ நாவலில் கிரேஸ் மெல்புரி தன்னை நேர்மையுடன் காதலிக்கும் கைல்ஸ் விண்டர்போனை நிராகரித்து டாக்டர் ஃபிட்ஜ் பியர்ஸின் பகட்டில் மயங்கி அவரைத் திருமணம் செய்கிறாள். ஃபிட்ஜ்பியர்ஸின் துரோகத்தை அறிந்து மீண்டும் கைல்ஸ் விண்டர்போனிடம் வந்து சேருகிறாள். ஹார்டியின் நாவல்கள் அனைத்திலும் பொருந்தாக் காதலர்கள் திரும ணம் எனும் பந்தத்தில் சிக்கித் தவிப்பதைப் பார்க் கிறோம்.

இருமுறை நழுவிய நோபல்

‘தாமஸ் ஹார்டி நான்கு தொகுப்புகளில் முப்பது சிறுகதைகளும் எழுதியுள்ளார். ‘தி வெசக்ஸ் கதைகள்’, ‘லைஃப்ஸ் லிட்டில் ஐரனீஸ்’, ‘எ குரூப் ஆஃப் நோபில் டேம்ஸ்’ ‘எ சேன்ஜ்டு மென் அன்டு அதர் ஸ்டோரீஸ்’ என்ற நான்கு தொகுப்பின் கதைகளும் நேர்த்தியாக எழுதப்பட்டவைகளாகும்.

ஹார்டி வாழ்வின் மீது அவநம்பிக்கை கொண்டவர் (Pessimist) என்று சில திறனாய் வாளர்கள் கருதுகின்றனர். ஹார்டியின் நாவல் கள் மிகை உணர்ச்சிகள் (Melodramatic) கொண்டதாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு முண்டு. ஹார்டியின் நாவல்கள் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் வரையறுக்கும் செவ்வியல் இலக்கியக் கோட்பாடுகள் அடிப்படையில் இருப்பதாகப் போற்றப்படுகின்றன. ஷேக்ஸ் பியரின் துன்பியல் நாடகங்களுக்கு இணையா னவை என்று கொண்டாடப்படுகின்றன. இலக் கியத்துக்கான நோபல் பரிசுக்கு தாமஸ் ஹார்டி யின் பெயர் இருமுறை பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் இப்பரிசு இவரை நழுவிச் சென்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.