‘இந்த முறை வாக்காளர் புகைப்படம் பூத் ஸ்லிப்பில் இடம்பெறாது!
18 Mar 2026, 3:34 pm
<p><strong>‘இந்த முறை வாக்காளர் புகைப்படம் பூத் ஸ்லிப்பில் இடம்பெறாது!</strong></p>
<p>தேர்தல் ஆணையம் அறிவிப்பு சென்னை, மார்ச் 18 - நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்த லில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் இந்த முறை புகைப்படம் இடம்பெ றாது என்று தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. அதற்குப் பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு அச்சிட்டு வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்த வாக்குச் சீட்டில், வாக்குச் சாவடி யின் பெயர், வாக்குப்பதிவு நாள், நேரம் போன்றவை மட்டுமே இடம்பெற்றிருக்கும். இந்த சீட்டுகள், வாக்குப் பதிவுக்கு 5 நாட்க ளுக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவல ரால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும். எனினும், வாக்குச்சாவடியில் இந்த சீட்டு அடையாளத்தை மெய்ப்பிக்கும் ஆவண மாக ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் கூறப் பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைத்து வாக்கா ளர்களும், வாக்குச்சாவடியில் தங்கள் அடை யாளத்தை மெய்ப்பிக்க புகைப்பட அடை யாள அட்டையை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது மேற்கூறிய மாற்று ஆவ ணங்களில் ஏதேனும் வைத்திருப்பதால் மட்டுமே வாக்களித்து விட முடியாது. அந்த வாக்காளரின் பெயர் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்குரிமையை செலுத்த தகுதியுடையவர் ஆவார் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வேறொரு தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தாலும், அந்த வாக்காளரின் பெயர் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்குரிய பட்டியலில் இருந்தால் அதை யும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அசல் கடவுச் சீட்டின் அடிப்படையில் மட்டுமே தங்கள் அடையாளத்தை மெய்ப்பிக்க வேண்டும். தேர்தல் செலவின கண்காணிப்பு தீவிரம் தேர்தல் களத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான சூழலை உருவாக்கும் நோக்கில் வேட்பா ளர்களின் தேர்தல் செலவினங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. சட்டப்பேர வைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிக பட்சம் ரூ. 40 லட்சம் வரை மட்டுமே செலவிட இயலும். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகு திக்கு தலா 9 பறக்கும் படைகளும் 9 நிலை கண்காணிப்பு குழுக்களும் என மொத்தம் 2,160 பறக்கும் படைகளும் 2,160 நிலை கண் காணிப்பு குழுக்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டு, 61 இனங்களில் குற்றவியல் நடவடிக்கைக்கு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.</p>
