தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இது எங்கள் நியூயார்க் - ஜோரன் மம்தானி

8 Nov 2025, 5:47 pm
இது எங்கள் நியூயார்க் - ஜோரன் மம்தானி

இது எங்கள் நியூயார்க் - ஜோரன் மம்தானி

தோழர்களே, நண்பர்களே, நியூ யார்க்கின் உழைக்கும் மக்களே! இன்று மாலை நம் நகரின் மீது சூரியன் மறைந்திருந்தாலும், யூஜின் டெப்ஸ் ஒருமுறை கூறியதுபோல்: “மனிதகுலத்திற்கான ஒரு சிறந்த விடியலை நான் காண்கிறேன்.” எமக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக, இந்நகரின் உழைக்கும் மக்களிடம், செல் வந்தர்களும் அதிகார மையங்களும், “அதிகா ரம் உங்கள் கைகளில் தங்காது” என்று திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர். கிடங்குகளில் பெட்டிகள் தூக்கிப் புண்ணான கைவிரல்கள், விநியோக சைக்கிள்களை ஓட்டி தழும்பேறிய உள்ளங்கைகள், சமையலறைகளில் சூடேறி வடுவான முழங்கைகள்... இத்தகைய கைகளுக்கு அதிகாரம் கிடை யாது என்று மறுக்கப்பட்டது.

ஆனால், கடந்த பன்னிரண்டு மாதங்க ளாக, நீங்கள் உறுதியுடன் எதையோ நோக்கி எட்டிப் பிடித்தீர்கள். இன்று, அனைத்து எதிர்ப்பு களையும் மீறி, நாம் அதைப் பற்றிக்கொண்டு விட்டோம். எதிர்காலம் இப்போது நம் கைகளில். நண்பர்களே, நாம் ஒரு அரசியல் வம்சா வளியை வீழ்த்திவிட்டோம்! மறக்கப்படும் மக்களே... ஜனவரி 1ஆம் தேதி, நான் நியூயார்க் நகரின் மேயராகப் பதவியேற்பேன். அது உங்க ளால் மட்டுமே சாத்தியமானது. அதனால், வேறெதுவும் சொல்வதற்கு முன் நான் இதைக் கூறிவிட வேண்டும்: நன்றி.

இந்நகரின் அரசியலில் பெரும்பாலும் மறக்கப்படும் மக்களே, இந்த இயக்கத்தைத் தங்களின் இயக்கமாக மாற்றியமைத்த உங்க ளுக்கு நன்றி. ஏமனி அங்காடி உரிமையாளர்கள், மெக்சி கன் பாட்டிமார்கள், செனகலீஸ் டாக்ஸி ஓட்டு நர்கள், உஸ்பெக் செவிலியர்கள், டிரினிடாட் சமையல்காரர்கள், எத்தியோப்பிய அத் தைகள்... ஆம், நம் அத்தைகளுக்கும் நன்றி. இந்த வெற்றி, எல்ம்ஹர்ஸ்ட் மருத்துவ மனைக்கு வெளியே நான் சந்தித்த 1199 அமைப்பாளர் வெஸ்லிக்குச் சொந்தமானது.

அதிக வாடகையால் வெளியேற்றப்பட்டு, பென் சில்வேனியாவிலிருந்து தினமும் நான்கு மணி நேரம் பயணிக்கும் ஒரு நியூயார்க்கருக்கானது. “நான் நியூயார்க்கை நேசித்தேன், ஆனால் இப்போது அது வெறும் வசிப்பிடம்” என்று பேருந்தில் என்னிடம் சொன்ன அந்தப் பெண்ணுக்கானது. நகர மண்டபத்திற்கு வெளியே 15 நாட்கள் என்னுடன் உண்ணாவிரதம் இருந்த, இன்றும் வாரம் முழுவதும் டாக்ஸி ஓட்டும் ரிச்சர்டுக்கு மானது. சகோதரர்களே, நாம் இப்போது நியூயார்க் மாநகர மன்றத்திற்குள்ளே  நுழைந்துவிட்டோம்! இந்த வெற்றி அவர்கள் அனைவருக்கும். லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களாகிய உங்கள் அனைவருக்கும். நான் உங்களிடம் இன்று ஒரு இறுதி வேண்டு கோளை வைக்கிறேன்: மொத்த நியூயார்க் மக்களும் இந்தக் கணத்தில் ஆழமாக மூச்சு விடுங்கள். நாம் நீண்ட நாட்களாக மூச்சைப் பிடித்துக்கொண்டிருந்தோம். தோல்வியைத் தவிர்ப்பதற்காக, நெஞ்சில் இடி விழுந்ததால், மூச்சுவிட முடியாமல், கட்டுபடியாகாததால்... எனப் பல கார ணங்களால் பிடித்துக்கொண்டிருந்தோம். அத்துணைத் தியாகங்களுக்கும் நன்றி. இன்று, நாம் மீண்டும் பிறந்த நகரத்தின் காற்றைச் சுவாசிக்கிறோம். எனக்கு வாக்களிக்காத, என் எதிர்ப்பாளர்க ளுக்கு வாக்களித்த, அல்லது அரசியலில் நம்பிக் கையிழந்து வாக்களிக்காத ஒவ்வொரு நியூ யார்க்கருக்கும் நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு தகுதியானவனாக என்னை நிரூபிக்கும் வாய்ப்பிற்கு நன்றி. நம்பிக்கை உயிர்ப்புடன் உள்ளது! சாத்தியமற்றதைச் சாத்தியமாக்க முடியும் நம்பிக்கை என்பது ஒரு முடிவு. சர்வாதிகா ரத்தை விட நம்பிக்கையை, பெருத்த பணத்தை யும் குறுகிய சிந்தனைகளையும் விட நம்பிக்கை யை, விரக்தியை விட நம்பிக்கையை, நியூயார்க் கர்கள் தேர்ந்தெடுத்தனர். சாத்தியமற்றதைச் சாத்தியமாக்க முடியும் என்று நம்பும் தைரியமே இது. இனி, அரசியல் என்பது நமக்குச் செய்யப் படும் ஒன்றல்ல. அது நாம் செய்யும் ஒன்றாக மாறும். பழையதில் இருந்து புதியதிற்கு நாம் காலடி எடுத்து வைத்திருக்கிறோம்.

இந்த புதிய யுகம் எதை வழங்கும், யாருக்காக வழங்கும் என்பதைத் தெளிவாகவும் உறுதியுடனும் பேசுவோம். வாழ்க்கைச் செலவினப் பெருக்கத்தைச் சமாளிக்க, இந்நகரம் பியோரெல்லோ லா கார்டி யாவின் காலத்திற்குப் பின் கண்டிராத மிக லட்சியமான திட்டத்தை முன்வைக்கும்: H 20 லட்சத்திற்கும் மேலான வாடகைக் கட்டுப் பாடுள்ள குடியிருப்பாளர்களின் வாடகையை  குறைப்போம், உயர்வைத் தடுப்போம். H பேருந்துகளை வேகமாகவும், கட்டணம் இல்லாமலும் ஆக்குவோம். H நகரம் முழுவதும் அனைவருக்கும் குழந்தை பராமரிப்புத் திட்டத்தை வழங்குவோம். பாதுகாப்பும் நீதியும் கைக்கோத்து நடக்கும். குற்றத்தைக் குறைக்க காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்று வோம், மேலும் மனநல நெருக்கடி மற்றும் வீடற்றோர் நெருக்கடிகளை நேரடியாகச் சமாளிக்கும் ஒரு ‘சமூகப் பாதுகாப்புத் துறை’ யை உருவாக்குவோம். இந்த புதிய யுகத்தில், நியூயார்க் ஓர் ஒளியாக இருக்கும். நீங்கள் ஒரு குடியேறியாக, திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவராக, டிரம்ப்பால் நீக்கப்பட்ட கருப்பினப் பெண்ணாக, ஒற்றைத் தாயாக...

யாராக இருந்தாலும், உங்கள் போராட்டம் எமக்கானதும் கூட. யூத நியூயார்க்கர்களுக்கு உறுதுணையாக நிற்கும் நகர மன்றமாக இது அமையும், யூத-எதிர்ப்புப் பேய்க்கு எதிராகத் தயங்காமல் போரா டும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், இந்த ஐந்து மாவட்டங்களில் மட்டுமல்ல, அதிகாரத்தின் கூடங்களிலும் தங்களுக்கு இடம் உண்டு என்பதை அறிவார்கள். இனி, இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பி, இந்நகரில் தேர்தலில் வெல்ல முடியாது. ஜனவரி 1ஆம் தேதி, அனைவருக்கும் உத வும் ஒரு நகர அரசாங்கத்தைத் தொடங்கி வைக்கிறோம்.

திருவாளர் டிரம்ப் அவர்களே... டொனால்டு டிரம்ப் அவர்களே, உங்களை எதிர்த்து வெல்ல முடியும் என்பதை இந் நகரால் காட்ட முடியும். இந்தக் கணத்தில் உங்க ளுக்கு நான் சொல்லும்  வார்த்தைகள்: “முழக்கத்தின் அளவை உயர்த் துங்கள்!” மோசமான வீட்டுரிமையாளர்க ளைக் கணக்குக் கேட்போம். டிரம்ப் பைப் போன்ற கோ டீஸ்வரர்கள் வாடகை யாளர்களைச் சுரண்டு வதில் மிகவும் சௌகரி யமாகிவிட்டனர். தொழிற்சங்கங்க ளுடன் உறுதியாக நிற் போம், தொழிலாளர் பாதுகாப்பை விரிவு படுத்துவோம். தொழிலாளர்களுக்கு அசைக்க முடியாத உரிமைகள் இருக்கும்போது, அவர்களைச் சுரண்ட முயலும் முதலாளிகள் மிகவும் சிறுத்துப் போவார்கள் என்பது டிரம்ப்புக்குத் தெரியும். நியூயார்க், புலம்பெயர்ந்தோரின் நகரமாகவே தொடரும்.

புலம்பெயர்ந்தோரால் கட்டப்பட்ட, புலம்பெயர்ந்தோரால் இயக் கப்படும், மற்றும் இன்று முதல், ஒரு புலம் பெயர்ந்தவனின் தலைமையில் இயங்கும் நகரமாகவும் தொடரும். எனவே,  டிரம்ப் அவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: எங்களில் யாரை யாவது குறிவைக்க நீங்கள் நினைத்தால், முதலில் எங்கள் அனைவரையும் தாண்டி வரவேண்டும். நான் இளையவன். நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு ஜனநாயக சோசலிஸ்ட். மேலும், இவற்றில் எதற்காகவும் மன்னிப்புக் கேட்க நான் மறுக்கிறேன். எங்கள் மகத்துவம் எதார்த்தமானதாக இருக்கும். ஒவ்வொரு வாடகைக் கட்டுப் பாடுள்ள குடியிருப்பாளரும் நிம்மதியாக உணருவார். ஒவ்வொரு தாத்தா பாட்டியும் தங்கள் பேரக்குழந்தைகள் அருகில் இருப்ப தைக் கண்டு மகிழ்வார்கள்.

ஒற்றைத் தாய் பாதுகாப்பாகப் பயணித்து, தனது வேலைக்கு நேரத்திற்குச் சென்று திரும்புவார். மிக முக்கியமாக, தாங்கள் நேசிக்கும் நகரம் இறுதியாகத் தங்களை நேசிப்பதை ஒவ் வொரு நியூயார்க்கரும் உணருவார்கள். நியூயார்க்கே, நாம் இதை ஒன்றாகச் செய்வோம். நாம் ஒன்றாகப் பேசிய வார்த்தைகள், நாம் ஒன்றாகக் கண்ட கனவுகள், நாம் ஒன்றாக வழங்கும் நிரலாக மாறட்டும். நியூயார்க்கே, இந்த அதிகாரம்... உங்க ளுடையது. இந்த நகரம்... உங்களுக்கு சொந்தமானது. வாழ்க நியூயார்க்! வாழ்க உழைக்கும் மக்கள்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.