முந்தய பக்கம்

“இது நம்ம ஆட்டம் 2026”: வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய துணை முதல்வர்

24 Feb 2026, 3:55 pm
“இது நம்ம ஆட்டம் 2026”: வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய துணை முதல்வர்
<p><strong>&ldquo;இது நம்ம ஆட்டம் 2026&rdquo;: வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய துணை முதல்வர்</strong></p> <p>சென்னை பிப். 24 - தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் &ldquo;முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா &ndash; இது நம்ம ஆட்டம் 2026&rdquo; மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பதக்கங்கள் அணிவித்துப் பரிசுத் தொகை காசோலைகளை வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் போட்டிகளுக்காக மொத்தம் ரூ.42.87 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஊராட்சி ஒன்றிய அளவில் ரூ.16.53 கோடி, மாவட்ட அளவில் ரூ.3.73 கோடி, மாநில அளவில் ரூ.49 லட்சம் என மொத்தம் ரூ.20.75 கோடி பரிசுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய அளவிலான போட்டிகளில் 2,36,064 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்; அவர்களில் 82,664 பேர் பரிசு வென்றனர். மாவட்ட அளவில் 32,276 பேர் பங்கேற்க, 9,324 பேர் பதக்கம் பெற்றனர். மாநில அளவிலான போட்டிகளில் 1,221 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க, 99 பேர் பதக்கம் வென்றனர். பெண்கள் கபடியில் செங்கல்பட்டு மாவட்டம் தங்கம் வென்றது. ஆண்கள் கயிறு இழுத்தலில் திருவண்ணாமலை, பெண்கள் கயிறு இழுத்தலில் தஞ்சாவூர், ஆண்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் கன்னியாகுமரி மாவட்ட அணிகள் முதலிடம் பெற்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram