முந்தய பக்கம்

இது பொறுப்பதில்லை - நவகவி

24 Jan 2026, 1:00 pm
இது பொறுப்பதில்லை -  நவகவி
<p><strong>இது பொறுப்பதில்லை</strong></p> <p>இது பொறுப்பதில்லை -தோழா எரிதழல் கொண்டு வா! கதிரை வெனிசுலாவை -தீண்டும் &nbsp;கையைப் பொசுக்கிட வா ! &nbsp;போன நூற்றாண்டின் -அந்த ஈனக் காலனியம் மீண்டும் தலைஎடுக்கும் - அதை கூண்டில் அடைத்திடணும் ! &nbsp;வெண்பு றாக் கூட்டை - தன் வீடாக்கு தே கழுகு ! கொஞ்சும் கிளிக் கூட்டில் - பாம்பு முட்டை யிடவருது ! &nbsp;சாகும் கிழவனுக்கு - உயிர்த் தண்ணீர் உதவிடுமோ ? மாளும் ஏ காதிபத்யம் -பெட்ரோல் உண்டும் பிழைத்திடுமோ ? &nbsp;பாடை கட்டியாச்சே - ஏ காதி பத்தியமே பல் துருவ உலகில் - உனக்கு பட்டினி தான்உணவே ! &nbsp;பூமியைப் புண்ணாக்கி -அந்த &nbsp;புண்ணில் குடியேற ஆதிபத் தியப் புழு - வருதே ஆசை வரை மீற! &nbsp;நானும் வெனிசுலா -தம்பி நீயும் வெனிசுலா ! ஞானம் மிகு மனிதர் - ஓதும் நாமம் வெனிசுலா ! &nbsp;வான வெளி எங்கும் -கோஷம் போகும் பார்உலா! ஈனன் ட்ரம்ப் செவியை -குடையும் ஈட்டி வெனிசுலா ! &nbsp;அமெரிக்கா எங்கும் - மக்கள் கோபம் கொதிக்கிறது! வெள்ளை மாளிகை மேல் -அவர் எச்சில் தெறிக்கிறது! &nbsp;சுதந்தி ரச் சிலை - மட்டுமா சுடரை ஏந்தியது? அமெரிக்க மக்கள் - நெஞ்சம் அனைத்தும் ஏந்தியது ! &nbsp;இரணி யன் வயிற்றில் -பிறக்கும் பிரக லாதன்போல் வல்லரசின் வயிற்றில் -பிறக்கும் சமதர் மக்கூர் வேல்! &nbsp;பாம்பு தன் குட்டியையே -விழுங்கும் பழக்கம் கேட்டதுண்டு! ஆம் இந்த வல்லரசு - நேட்டோ டென்மார்க்கை கவ்வுமின்று ! &nbsp;டாலடிக்க வில்லை - இப்போ டாலர் நாணயமே! ஆளடிக் கும் வலிமை -அதன் ஆணவம் போனதுவே ! &nbsp;வெனிசு லா நாடே ! - நீ விந்தைத் தேன் கூடே ! &nbsp;கூட்டில் கையை விட்டான் - ட்ரம்பை கொட்டுது தேன்ஈயே! &nbsp;ஒற்றை யாய் இல்லை -சாவேஸ் உன்னதத் தாயகமே! நெற்றிக் கண் அம்மா - எங்கள் நெஞ்சும் உன் வீடகமே! &nbsp;சின்ன தேசமல்ல - நீ வண்ண தேசமம்மா! என்ன நான் சொல்ல? -உன்புகழ் பென்னம் பெரிய தம்மா! &nbsp;பெட்ரோல் வளநாடே - உன் பெருமைக் கெது ஈடே ? குற்றேவல் செய்ய -மறுத்தாய் &nbsp;வீரத்தின் குறியீடே! &nbsp;தாவீது கோலியாத்தை -கொன்ற காவியக் கதை கேளும்! வீரிய வெனிசுலாவே - ஆதி பத்தியம் வீழும் வீழும்!</p>
Share
FacebookXWhatsAppTelegram