தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இது தொழிலாளி உயிர் வாழ்வதற்கான போர் சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர். கருமலையான் நேர்காணல் - ஆர்.கருமலையான்

4 Dec 2025, 3:52 pm
இது தொழிலாளி உயிர் வாழ்வதற்கான போர் சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர். கருமலையான் நேர்காணல் -  ஆர்.கருமலையான்

இது தொழிலாளி உயிர் வாழ்வதற்கான போர் சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர். கருமலையான் நேர்காணல்

ஒன்றிய மோடி அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை எதிர்த்து சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் நீண்ட போராட்டத் திட்டங்களைத் தொகுத்துள்ளன. இதையொட்டி சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் தீக்கதிருக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் பகுதிகள்:

n    கேள்வி: 29 சட்டங்களை ஒருங்கிணைத்து 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் ஒரு சாதாரண இந்தியத் தொழிலாளியின் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும்? பதில் : இந்தப் புதிய சட்டங்கள் ஒரு தொழிலாளியின் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய ஆபத்தை  உருவாக்கியுள்ளன. பணி நியமனம் முதல் ஓய்வு வரை தொழிலாளிக்கு அர ணாக இருந்த சட்டப் பாதுகாப்புகள் அனைத்திற்கும் இப்போது அடி விழுந்து விட்டது. ஏற்கெனவே இருந்த சட்டங்கள் யாருடைய பிச்சையும் அல்ல. அவை தொழிலாளர்கள் நெடிய போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளாகும். உதாரணமாக, 1923 இன் தொழிலாளர் இழப்பீடு சட்டம் (Workmen’s Compen sation Act), 1926 இன் தொழிற்சங்கச் சட்டம் (Trade Union Act), மற்றும் 1948 இன் தொழிற்சாலைகள் சட்டம் (Factories Act) ஆகியவை நீண்ட போராட்டத்தின் விளைவாக உருவானவை.

n     கேள்வி: மத்திய அரசு, ‘அதிகமான தொழிலாளர்களைச் சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறோம், சமூகப் பாதுகாப்பை உறுதி செய்கிறோம்’ என்று சொல்கிறதே? பதில் : அது அப்பட்டமான பொய். சுதந்திர இந்தியாவில் ஏற்கெனவே இருந்த சட்டங்களே மொத்தத் தொழி லாளர்களில் 7% முதல் 8% பேரை மட்டுமே பாதுகாத்தன. 90% முறை சாராத் தொழிலாளிகள் சட்ட வரம்புக்கு வெளியில்தான் இருந்தனர். இவர்களை யாவது உள்ளடக்குவோம் என்று சொல்லலாம், ஆனால் புதிய சட்டங்கள் இந்த வரம்பை மேலும் குறுக்கிவிட்டன. சட்ட வரம்புகளைக் குறைத்துவிட்டு, அதிகப் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று சொல்வது கேலிக்கூத்தானது.

n கேள்வி: எப்படி வரம்பு குறைகிறது? உதாரணத்துடன் சொல்ல முடியுமா? பதில் : ஆட்குறைப்பு அல்லது ஆலை மூடல் செய்ய, முன்பு 100 பேர் வேலை  செய்தால் அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டும். இப்போது மோடி  அரசு அதை 300 பேர் வரை நீட்டித்துள் ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலை களில் 90% இதற்குக் கீழ்தான் உள்ளன.  அதேபோல, புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தில் கூட, முன்பு 5 பேரை வேலைக்கு  சேர்த்தாலே நிறுவனம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றிருந்ததை 50 பேர் என்று உயர்த்தியுள்ளார்கள். இதன் பொருள், முதலாளிகள் யாருடைய அனுமதியும் இல்லாமல் ஆட்குறைப்பு செய்து, சுதந்திரமாகக் கொள்ளையடிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

n     கேள்வி: ‘சம ஊதியம், கிக் தொழிலாளர்களுக்கு பிஎஃப் போன்ற சலுகைகள் கட்டாயமாக்கப்படும்’ எனச் சொல்கிறார்களே? பதில் : அதுவும் உண்மை அல்ல. சம ஊதியம் என்பது ஏற்கெனவே இருக்கும் சட்டம் தான். இவர்கள் புதியதாக எதையும் கொண்டுவரவில்லை. மாறாக, இருக்கும் சட்டங்களை அமல்படுத்தாமல், முதலாளி களின் சுமையைக் குறைக்கவே இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். முதலாளிகள் என்ன கேட்கிறார்கள் என்றால், ‘சட்டங்களை அமலாக்கும் சுமையிலிருந்து எங்களை விடுதலை செய்யுங்கள் (Liberate from the Compliance Burden)’ என்று வெளிப்படை யாகக் கேட்கிறார்கள்.

n     கேள்வி: வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை என்று சட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்களே? பதில் : அது ஒற்றை வரி வசனம் மட்டுமே. அதன்பின்னால், வேலை  நேரத்தை நீட்டிப்பதற்கான பல ஏற்பாடு கள் உள்ளன. ஒரு காலாண்டிற்கு (3 மாதங்களுக்கு) 144 மணி நேரம் வரை ஓவர்டைம் ஆக்கிக்கொள்ள வழி உள்ளது. இதை ஒரு நாளைக்குக் கணக்கிட்டால் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக வரும். ஆகவே, வேலை நேரத்தை  நீட்டிப்பதற்கான அனைத்து ஏற்பாடு களும் இதில் வகை செய்யப்பட்டுள்ளன. n     கேள்வி: ஏன் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும்? தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில், உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதே? பதில் : இது மூலதனத்தின் லாபப் பசி. முதலாளித்துவம் நெருக்கடியில் உள்ளது. விற்பனை (Exchange) மூலம் லாபம் ஈட்டுவது குறைந்துவிட்டது. எனவே, இவர்களுக்குத் தொழிலாளியிடமிருந்து உபரி உழைப்பைச் சுரண்டி (Surplus Value Extraction) லாபம் ஈட்ட வேண்டிய தேவை உள்ளது. இவர்களுக்கு ஒரு தொழிலாளிக்குச் சம்பளம் கொடுக்கும் நேரம் போக, மீதமுள்ள உபரி உழைப்பு நேரத்தை எவ்வளவு நீட்ட முடியுமோ, அவ்வளவு லாபம் என்று கருதுகிறார்கள். நாராயணமூர்த்தி, சுப்பிரமணியன் போன்ற பெரு முதலாளிகள் இதையே தான் பிரதிபலிக்கிறார்கள்.

n கேள்வி: ‘பிக்ஸ்டு டேர்ம் எம்ப்ளாய்மென்ட்’ (குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு) மற்றும் காண்ட்ராக்ட் தொழிலாளர் முறை போன்ற வடிவங்கள் எந்த வகையில் தொழிலாளிக்கு ஆபத்து? பதில் : இது ஒரு கொடூரமான வடிவம். இது தொழிலாளிக்கு வேலையில் நிரந்தரம் இல்லை என்பதைச் சட்டமாக்குகிறது. இது தொழிலாளியை தினந்தோறும் நிச்சயமற்ற நிலையில் - பதற்றத்தில் வைக்கிறது. நிரந்தரத் தொழிலாளியைத் தவிர்த்து, அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட், அப்ரண்டிஸ் (NATS/NEEM) போன்ற வடிவங்களில் குறைந்த கூலியில் இளம் தொழிலாளர்களைக் கொள்ளையடிப்ப தற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுதான் இது.

n     கேள்வி: ஒரு தொழிலாளிக்குக் குறைபாடு ஏற்பட்டால், அதைத் தீர்த்துக்கொள்ளும் நீதி முறையில் என்ன மாற்றங்கள் வந்துள்ளன? பதில் :  குறைகள் தீர்க்கும் செயல்முறை (Grievance Redressal) முற்றிலும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் லேபர் ஆபீஸர் இருப்பார். அவருக்கு உயர் நீதிமன்றத்திற்குக் கீழான நீதி அதிகாரம் இருந்தது. அவர் தீர்ப்பு வழங்க முடியும்.  இப்போது இந்த மாவட்ட அளவிலான நீதி மன்றங்கள் (லேபர் கோர்ட்டுகள்) அகற்றப்பட்டுவிட்டன. ஒரு பீடித் தொழிலாளிகூட இப்போது தனக்கு நீதி கிடைக்க நேரடியாக உயர்நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார். அவரால் அது சாத்திய மில்லை. n கேள்வி: தொழிலாளர் துறையின் பாத்திரம் மாறியுள்ளதே? பதில் : தொழிலாளர் அமைச்சகம், “நாங்கள் இனிமேல் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம்; வேலைவாய்ப்பை உருவாக்க உதவு வோம் (Employment Facilitator)” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஒரு இறையாண்மைமிக்க நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை அமல்படுத்த வேண்டிய துறை, அந்த வேலையைக் கைவிட்டு, தொழிலாளர் பாதுகாப்பைக் கைகழுவிவிட்டது என்று அர்த்தம். n கேள்வி: சமூகப் பாதுகாப்பு (Social Security Code) குறித்து அரசு அதிகப் பிரச்சாரம் செய்கிறது. ஆனால், இதில் என்ன பாதகங்கள் உள்ளன? பதில் : சமூகப் பாதுகாப்பு என்பது தொழி லாளிக்கு ஏற்படும் விபத்து, இயலாமை, மற்றும் ஓய்வுக் காலத்திற்கான ஒரு பாதுகாப்பு அரண். இந்தியாவில் கடந்த  ஐந்து ஆண்டுகளில் மட்டும் 6,500 பேர்  தொழில் விபத்துகளில் இறந்திருக்கிறார் கள். இது ஒரு பூகம்பத்தில் இறந்தவர் களின் எண்ணிக்கைக்குச் சமமானது. ஆனால், தொழிற்சாலை விபத்து மற்றும் அபாயகரமான பணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் (Bhopal Provision  போன்ற சரத்துகள்) இந்தச் சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

n     கேள்வி: அபாயகரமான பணிச்சூழல்களில் (Hazardous Workplaces) தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? பதில் : இல்லை. கதிர்வீச்சு, நச்சு வாயுக்கள், அதிக வெப்பம் போன்ற அபாய கரமான சூழல்களில் இருந்து தொழிலாளி களைப் பாதுகாப்பதற்கான சட்டத் தரங்கள் (Safety Standards) நீக்கப் பட்டுள்ளன. உதாரணமாக, கர்ப்பிணித் தாய்மார்கள் வேலை செய்யும் இடத்தின் வெப்பத்திற்கும், கதிரியக்கத்திற்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்றெல்லாம் முந்தைய சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அதுபோன்ற பாதுகாப்பு விதிகள் அகற்றப்பட்டுள்ளன. n கேள்வி: சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுவது ஏன் முக்கியம்? பதில் : அதுதான் தொழிலாளியின் ஜீவனே. ஒற்றையாக நிற்கும் தொழிலாளி யை, மூலதனம் எளிதில் கசக்கி விழுங்கி விடும். கூட்டான அமைப்பு (Collective Body) இல்லையென்றால், தொழிலாளி எப்போதும் நிராயுதபாணியாகவே பணித்தளத்தில் இருப்பார். சங்கம் அமைக்கும் உரிமைதான் அவருக்குப் பாதுகாப்பு அரண். இந்தச் சட்டங்கள் அனைத்துப் பணித்தளங்களையும் ‘தொழிற்சங்கம் அற்ற மண்டலங்களாக’ (Trade Union Free Zone) மாற்றுவதையே இலக்காகக் கொண்டுள்ளன. சங்கம் அமைப்பதற்கான விதிகள், நிர்வாகிகளின் நியமனம், சந்தா போன்ற அனைத்திலும் அரசு தலையிடுகிறது.

n கேள்வி: வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமை கடுமையாக்கப்பட்டுள்ளதால், சட்டரீதியான போராட்டங்களுக்கு என்னவாகும்? ஆர். கருமலையான்: வேலைநிறுத்தம் செய்வதை 60 நாள் நோட்டீஸ் மூலம் கட்டுப்படுத்தி, கடினமாக்கிவிட்டார்கள். மேலும், சட்டரீதியான போராட்டமாக அல்லாமல், மாஸ் கேஷுவல் லீவ் (ஒரே  நேரத்தில் விடுப்பு எடுத்தல்) போன்ற மறை முக நடவடிக்கைகள்கூட இப்போது  ‘வேலை நிறுத்தம்’ என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டு, தண்டனைக்குரிய தாக மாற்றப்பட்டுள்ளது.

n     கேள்வி: இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடினால் மட்டுமே உரிமைகளை மீட்க முடியும் என்கிறீர்கள். போராட்டம் தோல்வியடைந்தால் என்னவாகும்? பதில் : வரலாறு எப்போதும் முன்னேறிச் செல்கிறது. ரோம சாம்ராஜ்யம் வீழ்ந்ததுபோல, மனித குல  வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் இந்த அடிமைப்படுத்தும் முறைகள் நிலைக்காது. உரிமையைப் பெறுவதற் கான போராட்டத்தில், சுதந்திரப் போராட்டத் தைப் போலவே விலை கொடுக்க வேண்டும். சிலர் வேலை இழக்கலாம், சிலர் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இந்தச் சட்டங்களைச் செயல் படுத்தவிடாமல் தடுப்பதே நமது திட்டம்

. n     கேள்வி: இறுதித் திட்டமாக, மத்திய தொழிற்சங்கங்கள் என்ன செய்ய முடிவெடுத்துள்ளன? பதில் : இந்தியாவின் அனைத்து மத்தியத்  தொழிற்சங்கங்களும் (All Central Trade Unions) இணைந்து இந்தச் சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான மற்றும் தீவிரமான போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இது தொழிலாளி யின் உயிர் வாழ்வதற்கான போர்; முதலாளிகளின் கோர லாபப் பசியை எதிர்த்து நின்று, இந்தச் சட்டங்களைச் செயல் இழக்கச் செய்ய முடியும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.