இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது ! ராணிப்பேட்டையில் டி. ரவீந்திரன் பேச்சு
1 Apr 2026, 4:02 pm
<p><strong>இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது ! ராணிப்பேட்டையில் டி. ரவீந்திரன் பேச்சு</strong></p>
<p>ராணிப்பேட்டை, ஏப்.1 – உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் வகுப்புவாத சக்திகளை மக்கள் முறியடிக்க வேண்டும், மதச்சார்பற்ற இந்தியாவின் இறையாண்மையை பாது காக்கவும்,வகுப்புவாத சக்திகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்கவும் தமிழக மக்கள் மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் தெரிவித்துள்ளார். சிபிஎம் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டம் திங்கட்கிழமை (மார்ச் 30) மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி தலை மையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு சார்பில் முதற்கட்டமாக தேர்தல் நிதி ரூ. 5 லட்சம் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரனிடம் வழங்கப்பட்டது. முன்னதாக சாரல் கலைக்குழு கலைஞர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், தற்போதைய அரசியல் சூழல், மக்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு களில் ஒன்றிய பாஜக அரசின் கொள்கை களை கடுமையாக விமர்சித்தார். இந்தத் தேர்தல் தமிழக ஆட்சியை தீர்மானிப்பது மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் தேர்தல் என்று குறிப்பிட்ட அவர் விவசாயிகள், தொழி லாளர்கள், உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடினால், அவர்களை மதம் மற்றும் இனத்தின் பெயரால் பிளவுபடுத்தும் வகுப்புவாத சதியை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக செய்கிறது. தமிழகத்தில் மத கலவரங்கள் உருவாக்கமுயற்சிக்கும் பாஜகவிற்கு, அதிமுக ஒரு 'பொம்மை ஆட்சியாக' துணை போகிறது" என்று அவர் சாடினார். "100 நாள் வேலைத் திட்டத்தை நாடாளு மன்றத்தில் போராடிப் பெற்றுத் தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், தற்போது அதன் பெயரை மாற்றி, திட்டத்தையே முற்றாக நிறுத்த பாஜக துடிக்கிறது. இதற்குத் துணை போகும் அதிமுகவை மக்கள் அறவே புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் மத கலவரத்தை உருவாக்க பார்க்கிறார்கள்.பாஜகவின் திட்டங்களை செயல்படுத்த அதிமுகவை தன் பொம்மையாகப் பயன்படுத்த திட்ட மிட்டுள்ளது" முட்டாள்கள் ஆளும் நாடு சுடுகாடு தேசத்தைப் பாதுகாக்க வகுப்பு வாத சக்திகளை முறியடிப்போம்" முட்டாள்களிடமிருந்து தேசத்தைப் பாது காப்போம்"என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் ஒற்றுமையையும் இறை யாண்மையையும் பாதுகாப்பதற்கான தேர்தல் இது எனவே, இத் தேர்தலில் மக்கள் திமுக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பி னர் கே. ஆறுமுகநயினார், மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா, விவசாய சங்க மாநில செயலாளர் இரா. சரவணன், மூத்த தோழர்கள் டி. சந்திரன், எல்சி. மணி, வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் என். காசிநாதன், தா. வெங்கடேசன், எஸ்.கிட்டு, ஆ. தவராஜ், ஆர். திலகா, ஆற்காடு தாலுகா செயலாளர் ஜி. மதியழகன், அரக்கோணம் தாலுகா செயலாளர் ஆர். வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில், நகர செயலாளர் ஜி. குணசேகரன் நன்றி கூறினார்.</p>
<p> </p>
