திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் தோழமை கட்சியினருடன் சந்திப்பு
2 Apr 2026, 3:50 pm

திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் தோழமை கட்சியினருடன் சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜ் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனத்தை சந்தித்து ஆதரவு திரட்டினார். உடன் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டக் செயற்குழு உறுப்பினர் துளசி நாராயணன், எஸ்.ராணி, மாவட்டக் குழு உறுப்பினர் வீ.ஆனந்தன், பகுதிச் செயலாளர்கள் வி.கமலநாதன், டி.பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

திருவொற்றியூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தரராஜ் கிழக்கு பகுதி செயலாளர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசை சந்தித்து ஆதரவு கோரினார். உடன் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருவொற்றியூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் எல். சுந்தரராஜ் மேற்கு பகுதிச் செயலாளர் வை.ம.அருள்தாசனை சந்தித்து ஆதரவு கோரினார். உடன் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் புவியரசி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், கே.ஆர்.முத்துசாமி (சிஐடியு) ஆகியோர் உடன் இருந்தனர்.

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜ் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மாதரம்மாகனி பாரூக்கை சந்தித்து ஆதரவு கோரினார். உடன் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், கே.ஆர்.முத்துசாமி (சிஐடியு) ஆகியோர் உடன் இருந்தனர்.