திருவொற்றியூர் வேட்பாளர் எல். சுந்தரராஜன் தாளவாடி ராயப்பனின் உயிர் காத்த ‘தோழமை’!
2 Apr 2026, 3:50 pm
<p><strong>திருவொற்றியூர் வேட்பாளர் எல். சுந்தரராஜன் தாளவாடி ராயப்பனின் உயிர் காத்த ‘தோழமை’!</strong></p>
<p>தேர்தல் களம் என்பது வெறும் வாக்குறுதிகளுக்கான மேடை அல்ல; அது மக்களின் துயரங்களில் தோள் கொடுத்தவர் களுக்கான அங்கீகாரம் என்பதை நிரூபிக்கும் ஒரு சம்பவம்தான் திருவொற்றியூர் சிபிஐ(எம்) வேட்பாளர் எல். சுந்தரராஜன் அவர்களின் அடையாளம். தாளவாடி டூ சென்னை: ஒரு உயிர் போராட்டம்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஈரோடு மாவட்டத்தின் மலைப்பகுதியான தாளவாடியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி ராயப்பனுக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. கோபி மருத்துவ மனையில் முதலுதவி பெற்று, பின் கோவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்றைய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அவர் களின் துரிதத் தலையீட்டால் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். சிபிஎம் ஈரோடு மாவட்டச் செய லாளர் ரகுராமன் வழிச்செலவிற்கு உதவி செய்ய, ராயப்பனும் அவ ரது மகனும் முன்பின் தெரியாத சென்னை மாநகருக்குத் தன்னந் தனியாகப் பயணமானார்கள். சென்னையில் அவர்களுக்கு யார் உதவி செய்வார் என்ற அச்சம் இருந்த நிலையில், வட சென்னை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளரிடம் உதவி கோரப்பட்டது. “நான் பார்த்துக் கொள்கிறேன் தோழர்” - இதுதான் அங்கிருந்து வந்த அந்த ஒற்றை வார்த்தை நம்பிக்கை. விம்மிய ராயப்பனின் மகன்! மறுநாள் காலையில் ராயப்ப னின் மகனிடமிருந்து வந்த தொலை பேசி அழைப்பு அனைவரையும் நெகிழ வைத்தது. “நேற்று இரவே தோழர்கள் மருத்துவமனைக்கு வந்து எங்களைச் சந்தித்தார்கள். தேவையான அனைத்து உதவி களையும் செய்து, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ள னர்” என்று அவர் விம்மினார். முன்பின் தெரியாத ஒரு விவசாயத் தொழிலாளியின் உயிரைக் காக்க, நள்ளிரவிலும் ஓடி வந்து நின்றதுதான் கம்யூனிஸ்டுகளின் மக்கள் சேவை. அன்றைய மாவட்டச் செயலாளர்... இன்றைய வேட்பாளர்! அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய அந்த விவ சாயத் தொழிலாளி ராயப்பன், இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தோழராக உயர்ந்து நிற்கிறார். அன்று ராயப்ப னின் உயிர் காக்கச் சென்னையில் களமிறங்கிச் செயலாற்றிய அந்த ‘வட சென்னை மாவட்டச் செய லாளர்’தான் இன்று திருவொற்றி யூர் தொகுதி வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ள எல். சுந்தரராஜன். மக்களோடு மக்களாக... மார்க்சிஸ்ட்கள்! “நாங்கள் மக்களுக்காக இருக்கிறோம்” என்று தேர்தலுக் காகச் சொல்லப்படும் வசனம் அல்ல இது; தாளவாடி முதல் திருவொற்றியூர் வரை நீண்டி ருக்கும் ஒரு தோழமையின் தொடர்ச்சி. ஆபத்துக் காலத்தில் கரம் கொடுப்பவர்களையே மக்கள் எப்போதும் தங்களின் பிரதிநிதி யாகத் தேர்ந்தெடுப்பார்கள். எல். சுந்தரராஜன் போன்ற களப்பணி யாளர்களின் வெற்றி, அடித்தட்டு மக்களின் நம்பிக்கையின் வெற்றியாக அமையும்! - க. ராஜ்குமார், ஈரோடு</p>
