தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவொற்றியூரில் அடிப்படை பணிகளுக்கு குறுகிய கால ஒப்பந்தம் மண்டல கூட்டத்தில் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தல்

18 Jul 2026, 10:22 pm
திருவொற்றியூரில் அடிப்படை பணிகளுக்கு குறுகிய கால ஒப்பந்தம் மண்டல கூட்டத்தில் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தல்
<p><strong>திருவொற்றியூரில் அடிப்படை பணிகளுக்கு குறுகிய கால ஒப்பந்தம் மண்டல கூட்டத்தில் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, ஜூலை 18- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்ட லக்குழு கூட்டம் தலை வர் தி.மு.தனியரசு தலைமை யில் நடை பெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் ஆர்.ஜெயராமன் பேசு கையில், தேர்தலுக்கு முன்பு பக்க கால்வாய்க ளுக்கு மூடி அமைக்க, சாலைகளை சீரமைக்க, அம்பேத்கர் விளையாட்டு திடலில் கால்பந்து, வாலி பால், டென்னிஸ் விளை யாட்டு மைதானம் அமைப்பது போன்ற பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அப்போதே குறுகிய கால ஒப்பந்தம் விடுவதாக மண்டல கூட்டத்தில் மண்டல அலுவலர் தெரி வித்தார். ஆனால் தேர்தல் அறிவித்துவிட்ட கார ணத்தினால் அப்போது அந்த பணிகள் நடைபெற வில்லை. இப்போது குறு கிய கால ஒப்பந்தம் கோரி அந்த பணிகள் உடனடியாக தொடங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த உதவி செயற்பொறியாளர் பாபு அதை உடனே செய்வ தற்கு ஆவண செய்வதாக தெரிவித்தார். மேலும் தற்போது லிமிடெட் ஒப்பந்தங்கள் கோருவது நிறுத்தி இருப்பதாக கேள்விப்படு கிறோம். முறை தவறி லிமிடெட் ஒப்பந்தங்கள் கோருவது முறையல்ல. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் பள்ளிகளில் மின்சார மோட்டார்கள் பழுது, தண்ணீர் குழாய் கள் உடைப்பு, அம்மா உணவகங்களில் அல்லது சாலைகளில் திடீரென்று பள்ளங்கள் ஏற்படுவது, மழை நீர் கால்வாய், பாதாள சாக்கடை அடைப்பு கள். குடிநீர் இணைப்பு, உடைப்புகள் போன்ற அத்தியாவசிய அவசர பணிகளை எல்லாம் ஓபன் ஒப்பந்தம் கோரி மூன்று மாத காலதாமதமானால் அந்த பணிகளை நிறை வேற்றுவது எப்படி? எனவே அவசர அவசியத்தை கருதி குறுகிய கால ஒப்பந்தங் களை கோர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த மண்டலத் தலைவர் அதிகாரி கள் அதை தடுக்கிறார்கள் என்று கூறினார். லிமிடெட் ஒப்பந்தம் 50 லட்சம் வரை கொடுக்கலாம் என சட்டம் இருக்கிறது. அரசு அதி காரிகள் ஆனாலும் சரி, அரசு ஊழியர்களானாலும் சரி மக்கள் பணியை நிறை வேற்றுவதற்காகவே இருக்கிறோம். அதற்கு மாறாக நடந்து கொள்வது சரியல்ல என்றார். நான்கு சாலை பணி யாளர்கள் இடம் காலியாக உள்ளன. உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அண்மைக்காலமாக தொடர்ந்து பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவ தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே மின்வாரிய அதி காரிகள் கூடுதல் கவனம் செலுத்தி மின் தடை ஏற்படுவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்.ஜெயராமன் கேட்டுக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.