திருவொற்றியூரில் மாணவர்களை தீவிரவாதிகள் போல் கைது செய்த காவல்துறை
3 hours before
<p><strong>திருவொற்றியூரில் மாணவர்களை தீவிரவாதிகள் போல் கைது செய்த காவல்துறை</strong></p><p>சென்னை, ஜூலை 22- திருவொற்றியூரில் நீட் தேர்வு குளறு படிகளை கண்டித்து போராடிய மாண வர்களை தீவிரவாதிகளை போல் காவல் துறையினர் கைது செய்துள் ள்ளனர். நீட், கியூட், சிபிஎஸ்இ தேர்வு குளறு படிகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தியும், தில்லியில் கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட் டத்தில் காலவரையற்ற உண்ணா நிலை இருந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் மற்றும் அபிஜித் திப்கே ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மாணவர் கள், இளைஞர்கள் போராடி வருகின்ற னர். அதன் ஒருபகுதியாக வடசென்னை யில் பெரம்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு கலை அறிவியல் கல்லூரி, ஆர்.கே.நகர், திருவொற்றியூரில் உள்ள அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவொற்றியூரில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கல்லூரி பேராசிரியர்களும், காவல் துறை ஆய்வாளர் அலெக்ஸ் தலை மையிலான காவல் துறையினரும் மாணவர்களை கட்டாயமாக உள்ளே செல்லும்படி மிரட்டி அனுப்பி வைத்த னர். இதையடுத்து மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்த காவல் துறையினர் அங்கு முழக்கமிட்ட சஞ்சய், இமானுவேல் உள்ளிட்ட 4 பேரை மாணவர்கள் என்று கூட பார்க்காமல் தாக்கி தீவிர வாதிகளை கைது செய்வது போல் வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற னர். அப்போது அங்கிருந்த மாணவர் சங்க மாவட்டத் தலைவர் க.அகல்யா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏன் மாணவர் களை கைது செய்கிறீர்கள், அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள், அவர்கள் மீது ஏன் முரட்டுத்தனமாக இழுத்து செல்கிறீர்கள் என்று சொல்லுங்கள் சார் என்று கேட்டபோது, காவல் துறை ஆய்வாளர் அதற்கு எந்த பதிலும் கூறா மல் மாணவர்களை கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து சென்று கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றார். இதில் சஞ்சய் என்ற மாணவருக்கு கழுத்து பகுதி முழுவதும் காவல் துறையினரின் நகக்கீறல்கள் பதிந்து காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் பரவியதையடுத்து ஆர்.கே. நகர் உள்ளிட்ட பிற கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் திரண்டு காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்டனர். அப்போது அங்கு வந்த துணை ஆணையர் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி. இனிமேல் இதுபோல் நடக் காது என்றும், நடந்த சம்பவத்திற்கு காவல் ஆய்வாளரிடம் விளக்கம் கடிதம் பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மிரட்டாது என்றும், அவர்கள் தொடர்ந்து கல்லூரிக்கு செல்லலாம் என்று துணை ஆணையர் தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர். இதில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் விஜய், செயலாளர் ஜி.நித்தி யராஜ், பொருளாளர் ஸ்டாலின், துணைத் தலைவர் புவியரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
