தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவொற்றியூரில் இறைச்சிக் கடைக்கு இந்துத்துவா குண்டர்கள் மிரட்டல் சிபிஎம் மாவட்டச் செயலாளர் நேரில் சென்று ஆறுதல்

18 Jul 2026, 11:41 pm
திருவொற்றியூரில் இறைச்சிக் கடைக்கு இந்துத்துவா குண்டர்கள் மிரட்டல் சிபிஎம் மாவட்டச் செயலாளர் நேரில் சென்று ஆறுதல்
<p><strong>திருவொற்றியூரில் இறைச்சிக் கடைக்கு இந்துத்துவா குண்டர்கள் மிரட்டல் சிபிஎம் மாவட்டச் செயலாளர் நேரில் சென்று ஆறுதல்</strong></p><p>சென்னை மாநகராட்சியின் முறை யான உரிமம் பெற்று, பல ஆண்டு களாக மாட்டிறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென பாரத் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவாஜி உள்ளிட்ட 4 பேர், காவல் உதவி ஆய்வா ளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சில காவலர்களுடன் முகமது அலியின் கடைக்குச் சென்று, “இங்கு மாடு வெட்டக் கூடாது” எனக் கூறி அராஜக மான முறையில் தகராறில் ஈடுபட்டு, அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். சட்டப்படியான உரிமத்துடன் இயங்கும் ஒரு வணிக நிறுவனத்திற்குள் புகுந்து, காவல்துறையினர் முன்னிலை யிலேயே இத்தகைய மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அத்துமீறல் குறித்துத் தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், முகமது அலியின் இறைச்சிக் கடைக்கு நேரில் சென்று, பாதிக்கப் பட்ட வியாபாரியிடம் நடந்த விப ரங்களைக் கேட்டறிந்த அவர், கட்சி சார்பில் அவருக்கு முழுமையான ஆறுதலையும், துணிவையும் தெரி வித்தார். மேலும் சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அரணாகத் துணை நிற்கும். அமைதியான சென்னையில் தங்களின் குறுகிய அரசியல் லாபங்களுக்காக மதக் கலவரத்தை தூண்ட நினைக்கும் எந்தவொரு சக்தியையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சட்டப்பூர்வமாக வியாபாரம் செய்பவர்களை அச்சுறுத்தி, மத வெறிப் போக்கோடு மிரட்டல் விடுத்த நபர்கள் மீதும், அவர்களுக்கு ஆதர வாக செயல்பட்ட காவல் துறையினர் மீதும் சட்டப்படி கடுமையான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் கூறினார். இந்த் சந்திப்பின் போது, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். பாக்கியலட்சுமி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச்செயலாளர் கே.எஸ்.கார்த்தீஷ்குமார், சிபிஎம் பகுதிச் செயலாளர் ஆர். கருணாநிதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் அம்சா பாய், வாகித், அன்சார், ரவீந்திரன், செம்மல் உள்ளிட்ட பலர் உடனிருந்து தங்களது வலுவான ஆதரவை வெளிப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாகப் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தி யில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.