திருவிக நகர்: ரூ.4.57 கோடியில் புதிய திட்டப்பணிகள்
28 Feb 2026, 2:29 pm

திருவிக நகர்: ரூ.4.57 கோடியில் புதிய திட்டப்பணிகள்

சென்னை, பிப்.28- சென்னை ஸ்ட்ரஹான்ஸ் சாலை மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன்படி, பெரம்பூர் நெல்வயல் சாலையில் நூலகக் கட்டடம், பழைய வெங்கடேசபுரம், வ.உ.சி. நகர், சிவசண்முகபுரம், ஸ்ட்ரஹான்ஸ் சாலை மற்றும் கேஎம்கார்டன் ஆகிய இடங்களில் பன்நோக்கு மையக் கட்டடங்கள், கிரே நகர் மற்றும் பழைய வாழைமா நகரில் உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காக்கள் அமைத்தல், செக்ரிடரியட் காலனி உடற்பயிற்சி கூடத்திற்கு உப கரணங்கள் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், மாவட்ட நூலக அலு வலர் மு.கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாடு விடும் விழா: 10 பேர் காயம்

வேலூர்,பிப்.28- வேலூர் மாவட்டம், முடினாம்பட்டு பொன்னியம்மன் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாடு விடும் விழாவில் 181 காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10 இளைஞர்கள் காயமடைந்தனர்; அவர்களுக்குத் தற்காலிக மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டது. இலக்கை விரைவாகக் கடந்த காளைகளுக்கு ரூ.55,000 முதல் பரிசு உட்பட 81 பரிசுகள் வழங்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இவ்விழாவில் வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.