நூலாற்றுப் படை
1 Nov 2026, 10:05 pm

தேவாரம் பாடிய மூவரின் வரலாறும் திருவாரூரின் பெருமைகளும்! - ஐ.வி. நாகராஜன்

திருவாரூர் மண்ணின் வரலாற்றுச் சிறப்புகளையும் பண்பாட்டுப் பெருமைகளையும் பேசும் வகையில் ‘வணக்கம் திருவாரூர்’ என்னும் நூல் வெளிவந்துள்ளது. வழக்கறிஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான சிகரம் ச. செந்தில்நாதன் எழுதியுள்ள இந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 35-க்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ள ஆசிரியர், இத்தாலிய மார்க்சிய அறிஞர் அந்தோணியோ கிராம்சியின் சிந்தனை வெளிச்சத்திலும் பக்தி இலக்கியத்தின் சமூகப் பொருளாதாரக் களத்திலும் நின்று திருவாரூரின் பெருமைகளைப் பதிவு செய்துள்ளார்.

இந்நூல் திரு வாரூர் மண்ணின் ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் ஒருங்கே விவாதி க்கிறது. கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் குறித்தும், தமிழிசை முழங்கிய ஆதி மும்மூர்த்திகள் குறித்தும் சுட்டிக்காட்டும் அதே வேளையில், தேவாரம் பாடிய மூவரின் வரலாற்றையும் மனுநீதி சோழனின் புராணத்தையும் விரிவாகப் பேசுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி திருவாரூரைச் சேர்ந்தவர் என்ற பெருமையையும், ஐந்து முறை தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்த கலைஞர் கருணாநிதி இம்மண்ணின் மைந்தர் என்பதையும் நூல் பதிவு செய்கிறது.

ஆரூர் கோயில், ஆழித்தேர், கமலாலயக் குளம் மற்றும் ஆரூரின் அறிவுச் சின்னமான மேல்நிலைப்பள்ளி ஆகியவை வாசகர்களின் கண்முன்னே காட்சியளிக்கின்றன. வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகம், போர்க்களம் காணாத திருவாரூர் எனும் சிறப்பு, தேசிய-திராவிட-பொதுவுடமை இயக்கங்களின் வரலாறுகள் எனப் பலதரப்பட்ட தரவுகள் இதில் நிரம்பியுள்ளன. திருவாரூர் மக்கள் மட்டுமன்றி, வரலாற்றுப் பிரியர்கள் அனைவரும் வாசித்துப் பெருமை கொள்ள வேண்டிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இதுவாகும்.

வணக்கம் திருவாரூர் ஆசிரியர்: சிகரம் ச. செந்தில்நாதன்வெளியீடு: சந்தியா பதிப்பகம்பக்கங்கள்: 161 விலை: ₹200/-

மனுஸ்மிருதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தியலுக்கு முற்றிலும் எதிரானது! - எம்.ஜே.பிரபாகர்

இந்திய நாடு எத்தகைய விழுமியங்களின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்பதில் இரு வேறுபட்ட துருவச் சிந்தனைகள் நிலவுகின்றன. ஒன்று பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் பழமைவாத மரபான ‘மனுஸ்மிருதி’; மற்றொன்று சமத்துவம், சகோதரத்துவம், தனிமனிதக் கண்ணியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உருவாக்கிய ‘இந்திய அரசமைப்புச் சட்டம்’. அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ச. சிவகுமார் சட்டரீதியிலான அணுகுமுறையோடும் வரலாற்றுச் சான்றுகளோடும் இந்த இரு கருத்துநிலைகளுக்கும் இடையேயான முரண்பாடுகளைத் தனது “அரசமைப்புச் சட்டமா? மனுஸ்மிருதியா?” என்னும் நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு சட்டத்தின் முன் சமத்துவத்தையும், 15-வது பிரிவு பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பையும், 17-வது பிரிவு தீண்டாமை ஒழிப்பையும் வலியுறுத்துகின்றன. இவை வர்ண ஆதிக்கப் படிநிலைகளையும் சமூக ஒடுக்குமுறைகளையும் நிராகரிக்கும் ஜனநாயக அடித்தளங்களாகும். இன்றைய சூழலில் சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய மூன்று தூண்களும் எதிர்கொள்ளும் சவால்கள், ஆளுநர்களின் எதேச்சதிகாரம், தொழிலாளர் சட்டங்கள், புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழ் உள்ளிட்ட 10 முக்கியமான கட்டுரைகள் வாயிலாக இந்நிலைப்பாட்டை ஆசிரியர் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.இன்றைய ஆட்சியாளர்கள் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சியை உதாசீனப்படுத்தும் பின்னணியில், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்பதை நூல் வலியுறுத்துகிறது. அம்பேத்கரியச் சிந்தனையைப் பயில விரும்புவோரும், சட்ட மாணவர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையாக இப்புத்தகம் திகழ்கிறது.

அரசமைப்புச் சட்டமா? மனுஸ்மிருதியா?

ஆசிரியர்: வழக்கறிஞர் ச. சிவகுமார்வெளியீடு: மாற்றுக்களம் புத்தக நிலையம், திருவொற்றியூர்-600019விலை: ₹120/-தொடர்புக்கு: 8300010311