தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவாரூர் தோழர் எம்.எஸ்.ஜெய்கிஷ் கார் மோதி மரணம் சாவில் சந்தேகம் என தந்தை புகார்

5 Feb 2026, 3:40 pm
திருவாரூர் தோழர் எம்.எஸ்.ஜெய்கிஷ் கார் மோதி மரணம் சாவில் சந்தேகம் என தந்தை புகார்
<p><strong>திருவாரூர் தோழர் எம்.எஸ்.ஜெய்கிஷ் கார் மோதி மரணம்&nbsp;சாவில் சந்தேகம் என தந்தை புகார்</strong></p> <p>திருவாரூர், பிப். 5- &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான எம். சேகரின் மகனும், கட்சியின் கொர டாச்சேரி ஒன்றியக் குழு உறுப்பினரு மான தோழர் எம்.எஸ். ஜெய்கிஷ் (40) புதன்கிழமை அன்று &nbsp;கார் மோதியதில் அகால மரணமடைந் தார். கட்சியின் முன்னணிச் செயல் பாட்டாளரான இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. &nbsp; சம்பவம் குறித்த விவரம் &nbsp; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவரான தோழர் ஜெய்கிஷ், புதன்கிழமை அன்று அடியக்கமங்கலம் பள்ளிவாசல் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த &nbsp;அடையாளம் தெரியாத கார் ஒன்று, &nbsp;அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றது. இக்கோர விபத்தில் பலத்த &nbsp;காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உடற்கூராய்வுக்குப் பிறகு, கொர டாச்சேரி அருகே அம்மையப்பனில் உள்ள அவரது இல்லத்தில் தோழர் ஜெய்கிஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்வில் திரளான தோழர்களும் பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். &nbsp;தலைவர்கள் அஞ்சலி; இரங்கல் &nbsp;தோழர் ஜெய்கிஷின் உடலுக்கு சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் வி.பி. நாகை மாலி, மாநிலக் குழு &nbsp;உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், மாநில &nbsp;பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், மாநிலச் செயலாளர் எஸ். துரைராஜ் ஆகியோர் நேரில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். &nbsp;மேலும் சிபிஎம் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரி முத்து, தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி. சிங்கார வேலன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஜி. சுந்தரமூர்த்தி, விவசாயிகள் சங்கத் திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, தஞ்சை மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், கொர டாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே.கோபிநாத் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். தகவல் அறிந்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மத்திய கட்டுப் பாட்டுக் குழு தலைவர் ஜி. ராமகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் உள்ளிட்ட தலைவர்கள், எம்.சேகரைத் &nbsp;தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொண்டனர். &nbsp;காவல்துறை விசாரணைக்குக் கோரிக்கை &nbsp;இதற்கிடையில், இந்த விபத்து தற்செயலானது அல்ல என்றும், இதில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி தோழர் ஜெய்கிஷின் தந்தை எம். சேகர் காவல்துறையில் புகார் மனு அளித்துள் ளார். விபத்தை ஏற்படுத்திய மர்ம காரை &nbsp;உடனடியாகக் கண்டறிய வேண்டும் &nbsp;என்றும், இந்தப் பலியின் பின்னணி யில் உள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும் தலை வர்கள் காவல்துறையினரை வலி யுறுத்தியுள்ளனர். மறைந்த தோழர் ஜெய்கிஷ்க்கு யமுனா என்ற மனைவி யும், ஸ்ரீவிழி, வேல்விழி என இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.