முந்தய பக்கம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் நகரச் செயலாளரும்

8 Feb 2026, 3:55 pm
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் நகரச் செயலாளரும்
<p>தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் நகரச் செயலாளரும், சிபிஎம் நகர உறுப்பினருமான என்.ராஜசேகர்-இந்திரா ராஜசேகர் இல்ல திருமண விழா ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் வர்த்த சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண விழாவிற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை ஏற்று மணமக்கள் ஆர்.திவகர்-ஆர்.ரோகினி வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி.முருகையன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.கே.என்.அனிபா, சிபிஎம் நகரச் செயலாளர், எம்.டி.கேசவராஜ் மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், வர்கக வெகுஜன அரங்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram