திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் வேட்புமனுத் தாக்கல்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் வேட்புமனுத் தாக்கல்</strong></p>
<p>திருவாரூர், ஏப். 4- திமுக தலைமையலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் சனிக்கிழமை திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பூண்டி.கே. கலைவாணன், தேர்தல் அதிகாரி டி. சத்தியாவிடம் மனுத் தாக்கல் செய்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் பி.எஸ். மாசிலமணி, திமுக நகர கழகச் செயலாளர் வாரை.பிரகாஷ், விசிக மாவட்டச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
