தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொற்றுநோய் பரவும் அச்சுறுத்தலில் திருவனந்தபுரம்

5 Jun 2026, 2:04 am
தொற்றுநோய் பரவும் அச்சுறுத்தலில் திருவனந்தபுரம்

தொற்றுநோய் பரவும் அச்சுறுத்தலில் திருவனந்தபுரம்

தொற்றுநோய் பரவும் அச்சுறுத்தலில் திருவனந்தபுரம் திருவனந்தபுரம், ஜூன் 4- கேரளத்தில் பருவமழை தொடங்க வுள்ள நிலையில், அதற்கு முன்ன தாக மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணிகளை திருவனந்த புரம் மாநகராட்சி முறையாகச் செய்ய தவறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி யுள்ளது. இ

தனால் நகரில் தொற்று நோய்கள் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தேங்கிய கழிவுநீர்: பரவும் நோய்கள் ஏற்கெனவே நகரின் பல பகுதி களில் சாதாரண காய்ச்சல், டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகத் தொடங்கியுள்ளன.

ஆமயிழஞ்சான் ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் இறங்கி வேலை செய்த பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, உடல் அரிப்பால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் ஜூன் 1 அன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.

இதனிடையே, தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீரில் இறங்கு பவர்கள், எலிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக ‘டாக்ஸிசைக்ளின்’ (Doxycycline) மாத்திரைகளை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட மருத்துவ அதிகாரி அறி வுறுத்தியுள்ளது, கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெயரளவுக்கே நடந்த தூய்மைப் பணி மாநகராட்சி நிர்வாகம் சில வாரங்களுக்கு முன்பு தம்பானூர் பகுதியில் தொடங்கிய தூய்மைப் பணிகள் அனைத்தும் பெயரளவுக்கே நடந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆமயிழஞ்சான் ஓடையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்குப் பல நாட்கள் தாமதம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓடையின் பக்கவாட்டுச் சுவர்கள் பல இடங்களில் இடிந்து விழுந்துள்ளன. அவை இதுவரை சரி செய்யப்படவில்லை.

முறை யாகக் குப்பைகளை அகற்றாததா லும், உடைந்த சுவர்களைச் சீரமைக் காததாலும் தான், ஓடைகளில் நீர்மட்டம் உயர்ந்து கழிவுநீர் சாலை களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள அபாயத்தில் தலைநகரம் இன்னும் இரண்டு நாட்களில் பருவமழை முழுமையாகத் தொடங்கவுள்ள நிலையில், தற்போ தைய சூழலில் கனமழை பெய்தால் திருவனந்தபுரம் நகரே வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. நகரின் பிரதான வடிகால்கள் கூட இன்னும் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட வில்லை.

சில இடங்களில் வாரியெ டுக்கப்பட்ட கசடுகளும், மண்ணும் உடனே அப்புறப்படுத்தப்படாததால், பெய்த சிறிய மழையிலேயே அவை மீண்டும் வடிகால்களுக்குள்ளேயே அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய பிறகு, நகரின் தூய்மைப் பராமரிப்புப் பணிகள் முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக உள்ளூர் மக்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிர மடையும் பட்சத்தில், தூய்மைப் பணிகள் அனைத்தும் முற்றிலும் முட ங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.