தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண் கவுன்சிலர்கள் மீது மீண்டும் தாக்குதல் பாஜகவிற்கு எல்டிஎப் எச்சரிக்கை

29 Jun 2026, 8:45 pm
பெண் கவுன்சிலர்கள் மீது மீண்டும் தாக்குதல் பாஜகவிற்கு எல்டிஎப் எச்சரிக்கை

பெண் கவுன்சிலர்கள் மீது மீண்டும் தாக்குதல் பாஜகவிற்கு எல்டிஎப் எச்சரிக்கை

கேரளத்தில் பாஜக தலைமை யிலான திருவனந்தபுரம் மாநகராட்சியின் கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமையும் பெரும் வன்முறைக் களமாக மாறியது.

கேரள சமூக விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (KAAPA) கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது திருச்சூர் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாஜக கவுன்சிலர் ஆர்.சுக தனை பதவியில் நீடிக்க அனுமதிப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலை மையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) ஆகிய இரண்டும் தொடக்கத்தில் இருந்தே கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. கடந்த வாரம் பாஜக கவுன்சிலர்களுடன் நடந்த மோதலில் காயமடைந்த எல்டி எப்-ஐச் சேர்ந்த மூன்று பெண் கவுன்சி லர்கள் திங்கள்கிழமை கூட்டத்திற்குச் சக்கர நாற்காலியில் வந்திருந்தனர்.

இந்நிலையில், திங்களன்று காலை மாநகராட்சியின் கவுன்சில் கூட்டம் தொ டங்கியதும் மாநகராட்சி மேயர் வி.வி. ராஜேஷ் பிரதமரின் வீட்டு வசதித் திட்ட (PMAY) லோகோவை வீடுகளின் முன் வைப்பதற்கு மாநில அரசுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.எம்.ஷாஜி பேசும் வீடியோ கிளிப் ஒன்றை திரையிட்டுக் காட்டினார். ஆனால் ஆர்.சுகதனை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் முழக்கங்க ளை எழுப்பினர். இதனால் நிகழ்ச்சி நிரல்க ளை அவசர அவசரமாக வாசித்து, கூட்டத்தை முடித்து வைப்பதாக பாஜக மேயர் ஓட்டம் பிடித்தார்.

ஆனால் மேயர் வெளியேறுவதற்கு முன்பே அரங்குக்குள்ளேயே பாஜக மற்றும் யுடிஎப் கவுன்சிலர்களுக்கு இடை யே கடுமையான மோதல் வெடித்தது. பாஜக கவுன்சிலரும், கல்வி நிலைக் குழுத் தலைவருமான செம்பழந்தி உதயன், யுடிஎப் கவுன்சில் கட்சித் தலை வரான கே.எஸ்.சபரிநாதன், காங்கிர ஸைச் சேர்ந்த இரண்டு பெண் கவுன் சிலர்களைத் தாக்கியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எல்டிஎப் கடும் கண்டனம்

இந்த சம்பவம் தொடர்பாக எல்டிஎப் வுன்சிலர் கே. ஸ்ரீகுமார் கூறுகையில்,”ஒரு கவுன்சிலர் தொடர்ந்து 4 கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றால் அவரது பதவி பறிபோகும். ஆனால் சிறையில் இருக்கும் சுகதனின் பதவியைக் காப்பாற்றுவதற்காகவே பாஜக மேயர் கடந்த 47 நாட்களாக கவுன்சில் கூட்டத்தைக் கூட்டாமல் தள்ளிப்போட்டார். மேயர் மாநகராட்சி யில் ஒரு ‘குண்டர் ராஜ்ஜியத்தை’ நடத்தி வருகிறார். எதிர்க்கட்சிகளுக்கு எதி ராக வன்முறையைப் பயன்படுத்து கிறார். கடந்த வாரம் பாஜக கவுன்சிலர் கள் நடத்திய தாக்குதலில் படுகாய மடைந்த எல்டிஎப்-ஐச் சேர்ந்த மூன்று பெண் கவுன்சிலர்கள் இதே அரங்குக்கு நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வந்துள்ளனர். இதனை வெறுமென பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.