திருவள்ளுவர் தினம் அனுசரிப்பு
18 Jan 2026, 4:50 pm
<p><strong>திருவள்ளுவர் தினம் அனுசரிப்பு</strong></p>
<p>உடுமலை, ஜன.18- உடுமலையில் வெள்ளியன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அய்யலு மீனாட்சி நகரில் திருவள்ளுவர் திருக்கோட்டத்தின் சார்பில், 25 ஆம் ஆண்டு விழா ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை யில் வெள்ளியன்று நடைபெற்றது. திருவள்ளுவர் திருக்கோட்டத்தின் பொறுப்பாளர் அருள்கணேசன் வரவேற்றார். இதன்பின் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, திருக்குறள் திறனறிப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் பேசுகையில், இனி வரும் காலங்களில் நமது பகுதியில் மாணவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் 1330 திருக்குறள்களை ஒப்பு விக்கும் நபர்களுக்கு ரூ.5000 ரொக்கத்தொகையும், நினைவுப்பரிசாக திருவள்ளுவர் கோப்பையும் வழங்குவதாக அறிவித்தார். மேலும், தேசிய பளு தூக்கும் போட்டியில் துருக்கி, இஸ்தான்புல் போன்ற நாடுகளில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற வீரருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.</p>
<p> </p>
