திருவள்ளூர் முதுபெரும் தோழர் அச்சுதன் காலமானார்
5 Feb 2026, 3:40 pm
<p><strong>திருவள்ளூர் முதுபெரும் தோழர் அச்சுதன் காலமானார்</strong></p>
<p>திருவள்ளூர், பிப்.5- அவசரநிலை காலத்திற்கு முன்பே மார்க்சிஸ்ட்கட்சியில் இணைந்து திருவள்ளூர் நகரில் கட்சி கிளை செயலா ளராகவும் வட்டக் குழு உறுப்பினராகவும் செயல்பட்ட முதுபெரும் தோழர் அச்சுதன் (வயது 85), புதனன்று (பிப் 4), திரு வள்ளூர் ஜெயா நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். கேரளாவை பூர்வமாக கொண்ட அச்சுதன், சென்னையில் டீக்கடையில் வேலை செய்து அங்கிருந்து பிறகு 1969-70ம் ஆண்டுகளில் திருவள்ளூர் வந்து மணவாள நகரில் ஒரு டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். திருவள்ளூரில் குடியேறிய அவர் மின்சார வாரியத்தில் பணியாற்றிக் கொண்டே சிபிஎம் முன்னணி ஊழியராக செயல்பட்டு வந்த ப.சுந்தரராசனை தொடர்பு கொண்டு, திருவள்ளூர் நகர கிளையில் இணைந்தார். திருவள்ளூரில் தோழர் அச்சுதன் டீக்கடை தான் கட்சி அலுவலகமாகவும், தோழர்களின் சந்திப்பு மையமாக செயல்பட்டு வந்துள்ளது. அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், அரிசி பதுக்கி வைப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தியதால், அச்சுதன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் தனது பங்களிப்பை செலுத்தி வந்தார். மறைந்த தலைவர்கள் வி.பி.சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன் ஆகியோருடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்கை உறுதியோடு திருவள்ளூர் பகுதியில் களப்பணியாற்றி வந்தார். தோழர் அச்சுதனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ஜோதிபாசு என்ற மகன், ரமணி, தரணி என்ற மகள்களும் உள்ளனர். அவரின் உடலுக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மூத்த தோழர்கள் ப.சுந்தரராசன், கே.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஜி.சம்பத், ஆர்.தமிழ்அரசு, பீடி சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.ஆர்.பலராமன், கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.எழிலரசன், என்.கீதா, ஏ.அப்சல்அகமது, வட்ட குழு உறுப்பி னர்கள் எஸ்.செந்தில்குமார், பூங்கோதை, உதயநிலா, ஆறுமுகம், சிஐடியு நிர்வாகிகள் து.மகேந்திரன், குப்பன், சங்கர்தாஸ், மு. ஜம்மு, ஜூப்ளிபாஸ்கர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூரில் உள்ள மயானத்தில் அச்சுதன் உடல் வியாழனன்று. (பிப் 5), தாகனம் செய்யப்பட்டது.</p>
