அரை நூற்றாண்டு வேதனையில் திருவள்ளூர் நகராட்சி மக்கள் குப்பைக் காட்டில் முடங்கியிருக்கும் நிர்வாகம்!
4 hours before
<p><strong>அரை நூற்றாண்டு வேதனையில் திருவள்ளூர் நகராட்சி மக்கள் குப்பைக் காட்டில் முடங்கியிருக்கும் நிர்வாகம்!</strong></p><p>திருவள்ளூர், ஜூலை 26- மாவட்டத் தலைநகராய் உயர்ந்து 30 ஆண்டுகள் கடந்தும், திருவள்ளூர் நகராட் சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள 8-வது வார்டு பகுதி இன்னும் முன்னேற்றம் காணாத பகுதியாக காட்சியளிக்கிறது. ராக்கி திரையரங்கம் அருகிலுள்ள லங்கா கார தெரு மற்றும் வீரனன் தெருக் களின் பின்புறம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலைபோல் குவிக்கப்படும் குப்பைகளும், அவற்றுடன் கலந்து வெட்ட வெளியில் ஆறாக ஓடும் சாக்கடை நீரும் அப்பகுதி மக்களின் வாழ்வியலைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. அரை நூற்றாண்டைக் கடந்தும் இந்த அவலத்தை மாற்றத் திராணியற்ற இந்நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு, தற்போது ஒட்டுமொத்த பொதுமக்களை யும் சுகாதாரச் சீர்கேட்டின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. வரியை மட்டும் கறாராக வசூலிக்கத் தெரிந்த நகராட்சி அதிகாரிகளிடம் முறை யிட்டுக் சோர்ந்துபோன பொதுமக்களின் கண்ணீர்க்கதைகள் எடுபடவில்லை. கடந்த 50ஆண்டுகளில் மாறி மாறி வந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் எந்த வொரு நிர்வாகமும் இந்தப் பகுதி மக்களின் துயரைத் துடைக்க முன்வரவில்லை. மாறாக, உள்ளாட்சிக்காக ஒதுக்கப்படும் நிதிகளில் கமிஷன் அடிப்பதில் மட்டுமே குறியாக இருந்த வார்டு கவுன்சிலர்களின் சுயநலத்தால், இரண்டு தலைமுறை மக்கள் கொசுக்களும் துர்நாற்றமும் நிறைந்த சாக்கடை நதி கரையிலேயே தங்களது வாழ்நாளைக் கழிக்கும் சாபக் கேட்டிற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன் மற்றும் நகர செயலாளர் எம்.உதயநிலா ஆகியோர் நேரில் பார் வையிட்டு வெளியிட்டுள்ள அதிருப்தி கோபத்தின் உச்சமாகும். நகராட்சியின் மையப்பகுதியில் உலகிற்கே தெரியாமல் குப்பைகளும் கழிவுநீரும் கலந்து வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருப்பதைக் சுட்டிக் காட்டியுள்ள அவர்கள், இன்னும் பல வீடு களுக்குப் பாதாளச் சாக்கடை இணைப்பு கூட வழங்கப்படாமல் வெட்டவெளியில் கழிவுநீர் செல்வது நாகரிக சமூகத்திற்குத் தலைகுனிவு என்றனர். இதனால் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கொடிய நோய்களின் பிடியில் தவிப்பதாகவும், உடனடியாக நகராட்சி நிர்வாகம் இந்த அவலத்தை முடி வுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். வருகிற வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவாவது இந்தக் குப்பைக் கிடங்கை முற்றிலுமாக அகற்றி, அப்பகுதியைத் தூய்மையான வாழிடமாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் ஒட்டு மொத்தக் குரலாக உள்ளது. மக்களின் அடிப்படை சுகாதார வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில், தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகமாவது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்புகின்றனர். திருவள்ளூர் நகராட்சி மக்கள். - பெ.ரூபன்</p>
