சென்னை விரைவு செய்திகள்
31 Mar 2026, 4:50 pm

வாக்கு பதிவு நாளன்று விடுப்பு என்பதால் ஊதியம் பிடித்தம் செய்யப்படக்கூடாது திருவள்ளூர் தேர்தல் அலுவலர் உத்தரவு

திருவள்ளூர், மார்ச் 31- திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 23.04.2026 அன்று வாக்கு பதிவு நடைபெற உள்ளதால், அனைத்து வாக்களர்களும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டி யுள்ளதால் மாவட்டத்தில் உள்ள தொழிற் சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், ஐடி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஏப்.23 அன்று வாக்கு பதிவு நடைபெற உள்ள தால், அனைத்து வாக்களர்களும் தேர்த லில் தவறாமல் வாக்களிக்க வேண்டியுள்ளதால் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறு வனங்கள், வணிக வளாகங்கள், கடை கள், ஐடி,பிபிஓ உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடு முறை வழங்கி மாவட்ட நிர்வாகத்தால் உத்தர விடப்பட்டுள்ளது. மேலும் மேற்படியான விடுப்பு நாளுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படக்கூடாது என சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிபந்தனைகள் மீறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மீது மக்கள் பிரிதிநித்துவ சட்டம் 1951 பிரிவு 135(B)-இன்படி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைவு

சென்னை, மார்ச் 31- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாயன்று சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 100 ரூபாய் குறைந்து ரூ.13,670-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.5ஆயிரம் சரிந்து ரூ.2,50,000-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

எம்.கே.பி நகரில் பெண் மரணம்; கணவரிடம் விசாரணை

சென்னை, மார்ச் 31- சென்னை எம்.கே.பி நகரில் 30 வயது மதிக்கத்தக்க சுகன்யா என்ற பெண், தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் மின்சார நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்திக் (34) என்பவரது மனைவியான சுகன்யாவுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திக்கின் மதுப்பழக்கம் காரணமாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மது அருந்திவிட்டு வந்த கார்த்திக்கும் சுகன்யாவும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுகன்யா ஒரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டதாகத் தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால், கதவை உடைத்து உள்ளே சென்ற கார்த்திக், சுகன்யா மயங்கிக் கிடப்பதைக் கண்டுள்ளார். உடனடியாக அவரை ஆட்டோ மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சுகன்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில், எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடல் புற்றுநோய் விழிப்புணர்வு

சென்னை, மார்ச் 31- தேசிய குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, சென்னை நுங்கம்பாக்கம் மெட்இந்தியா மருத்துவமனை சார்பில் ‘சி5 ஸ்பார்க்’ விழிப்புணர்வு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் டி.எஸ். சந்திரசேகர் பேசுகையில், “சென்னையில் குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. விழிப்புணர்வு இல்லாததால் பலரும் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதை ஊக்குவிப்பதே இந்த அமைப்பின் நோக்கம்” என்றார். இதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 1 முதல் பதிவு செய்யும் முதல் 20 பேருக்கு இலவச ‘கொலோனோஸ்கோபி’ பரிசோதனை செய்யப்படும். மேலும், ஜூன் மாதம் வரை பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு 20% கட்டணச் சலுகை வழங்கப்படும். விவரங்களுக்கு 98409 93135 அல்லது 12789 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை: பொதுமக்களுக்குக் கட்டுப்பாடுகள்

புதுச்சேரி, மார்ச் 31- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வியாபாரிகள் கவலை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் பிரதமர் மோடி ஏப்ரல் 3-ஆம் தேதி புதுச்சேரி வருகிறார். அன்று அண்ணா சாலையில் இருந்து பட்டேல் சாலை வரை திறந்த வாகனத்தில் ‘ரோட் ஷோ’ (Road Show) நடைபெறுகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள கடைகளைக் கட்டாயமாக மூட வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தங்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என அவர்கள் கூறியுள்ளனர். தேர்தல் அலுவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அலுவலர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பிரதமர் வருகையை முன்னிட்டுப் புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதிகள் ஏப்ரல் 4 அன்று ‘ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக’ அறிவிக்கப்படுகிறது. ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் மற்றும் பலூன்கள் மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கக் கடும் தடை விதிக்கப்படுகிறது

.” விழுப்புரத்தில் இருளில் மூழ்கிய அரசு ஊழியர் நகர்: மக்கள் அச்சம்

விழுப்புரம், மார்ச் 31- விழுப்புரம் தந்தை பெரியார் நகர் அருகே உள்ள அரசு ஊழியர் நகர் மற்றும் அஷ்ரப் நகர் பகுதி களில் கடந்த பல நாட்களாகத் தெருவிளக்குகள் எரியவில்லை. இது குறித்துக் கண்டமானடி ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் மற்றும் சிபிஎம் வார்டு உறுப்பினர் ஏ.சகாதேவன் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பாம்பு நடமாட்டம் மற்றும் திருடர்க ளின் அச்சம் அதிகரித்துள்ளதோடு, விபத்துகளும் ஏற்படு கின்றன. தேர்தல் நெருங்கும் வேளையில், உடனடியாகத் தெருவிளக்குகளைச் சரிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ. 17.12 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி, மார்ச் 31- தளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலை சந்திப்பில் திங்களன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுசோனை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது காரைச் சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 16,61,940 கண்டறியப்பட்டது. அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் ஒப்படைத்தனர்.

பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ. 24.83 லட்சம் நிதியுதவி

கிருஷ்ணகிரி, மார்ச் 31- தமிழக காவல்துறையில் 2009-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களால் உருவாக்கப்பட்ட “2009 பேட்ச் காவல்துறை உதவும் அன்பு உள்ளங்கள் குழு”, பணியின் போது உயிரிழக்கும் சக காவலர்களின் குடும்பங்களுக்கு உதவி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணியிலிருந்தபோது உயிரிழந்த சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த பெண் காவலர் கலைவாணியின் குடும்பத்திற்காக இக்குழுவினர் நிதி திரட்டினர். மல்லிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரட்டப்பட்ட ரூ. 24,83,894 நிதியை கலைவாணியின் குடும்பத்தாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ. 83.52 லட்சம் பறிமுதல்

கடலூர், மார்ச் 31- கடலூர் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மார்ச் 15 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கவும், உரிய ஆவணங்களின்றிப் பணம் கொண்டு செல்வதைத் தடுக்கவும் 87 பறக்கும் படைகள், 87 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 9 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 83,52,941 இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் தொகையை, முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்துத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 29 வரை ரூ. 71,04,270-ம், மார்ச் 30 அன்று ரூ. 10,56,121-ம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக, 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1950, 04142-290119 ஆகிய எண்கள் மற்றும் 8248774852 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம். இதுவரை ‘சி-விஜில்’ செயலி மூலம் விளம்பரப் பதாகைகள் அகற்றப்படாமை மற்றும் அனுமதியின்றி வாகனங்களை இயக்குதல் தொடர்பாக 28 புகார்கள் பெறப்பட்டுத் தீர்வு காணப்பட்டுள்ளன. அதேபோல், 1950 என்ற உதவி எண் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகம் குறித்து 611 புகார்களும், ‘கருடா’ செயலி மூலம் 674 புகார்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பெறப்படும் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து உடனுக்குடன் விளக்கமளித்து வருகிறது.